டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடைபெறும்

Google Oneindia Tamil News

டெல்லி: சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் லாக்டவுனால் நாடு முழுதுவம் பொதுத்தேர்வுகள் நடத்தப்ப்டுவதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

CBSE to hold remaining Class 12 board exams from July 1 to July 15

சி.பி.எஸ்.இ தரப்பும் அவ்வப்போதும் 10,12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொதுத்தேர்வுகள் அனைத்தும் நடைபெறும்; இதற்கான கால அட்டவணைப்படி விரைவில் வெளியிடப்படும் என கூறி வருகிறது.

இந்த நிலையில் நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. நீட் தேர்வு ஜூலை 26-ந் தேதியும் ஜே.இ.இ. தேர்வு, ஜூலை 18,20,21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ். இ 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான எஞ்சிய பொது தேர்வுகள் ஜூலை 1-ந் தேதி முதல் ஜூலை 15-ந் தேதி வரை என அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு

இருப்பினும் பாடவாரியாக தேர்வு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஎஸ் இ தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

English summary
CBSE will hold remaining Class 12 board exams from July 1 to July 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X