பிபின் ராவத் மரணம்.. குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான விசாரணை அறிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் கடந்த 2021ம் ஆண்டு தமிழகத்தின் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது. அதில் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட ஹெலிகாப்டரில் பயணித்த 12 பேரும் உயிரிழந்தனர். இதற்கிடையே இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு டிச.8ம் தேதி அப்போதைய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்டோர் சென்ற Mi-17 V5 ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது.

bipin rawat army

பிபின் ராவத்:

தமிழ்நாட்டின் குன்னூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பிபின் ராவத் உட்பட விமானத்தில் பயணித்த 12 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க அப்போதை குழு அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே 3 ஆண்டுகளுக்குப் பிறகு விபத்திற்கு என்ன காரணம் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான தகவல்கள் நேற்று முன்தினம் லோக்சபாவில் தாக்கலான பாதுகாப்புக்கான நிலைக்குழு அறிக்கையில் இடம்பெற்று இருக்கிறது. அதில் 2021ல் நடந்த விபத்திற்கு மனிதப் பிழையே (விமானப் பணியாளர்களின் பிழை) காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் நடந்த மற்ற விபத்துகள் குறித்தும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 34 இந்திய விமானப்படை விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 2021-2022 நிதியாண்டின் போது, ​​மொத்தம் ஒன்பது விபத்துகள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபின் ராவத் விபத்துக்கு என்ன காரணம்:

அதில் 2021 டிச.8ம் தேதி நடந்த இந்த விபத்து என்பது Human Error (Aircrew) காரணமாகவே நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதே விமானியின் பிழையால் விபத்து நடந்து இருக்கலாம் எனத் தகவல் வெளியான நிலையில், அதை உறுதி செய்வதாகவே இந்த அறிக்கை அமைந்துள்ளது.

முன்னதாக விசாரணைக் குழு தனது ரிப்போர்ட்டில், "அங்குப் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட திடீர் வானிலை மாற்றத்தால் அங்கு எதிர்பாராத விதமாக சில மேகக் கூட்டங்கள் நுழைந்தன. இதனால் ஹெலிகாப்டர் CFIT என்று வகைப்படுத்தப்படும் விபத்தில் சிக்கியது. ஹெலிகாப்டர் டேட்டா ரெக்கார்டர் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்துள்ளது" என்று கூறியிருந்தனர்.

CFIT- கன்ட்ரோல்டு ஃப்ளைட் இன் டெரெய்ன் என்பது ஒரு வகை ஹெலிகாப்டர் விபத்தாகும். விமானம் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே, எதிர்பாராத விதமாக விமானம் கடல் அல்லது மலையில் மோதி விபத்து ஏற்படுவதே CFIT விபத்து என்று அழைக்கப்படுகிறது. எதிரே என்ன இருக்கிறது என்பது தெரியாமல் இருக்கும் போது தான் பொதுவாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா உள்ளிட்டோரை ஏற்றிக்கொண்டு Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து ஊட்டி வெலிங்டனில் உள்ள டிபன்ஸ் ஸ்டாஃப் சர்வீஸ் காலேஜிற்கு சென்று கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் தரையிறங்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் மோதி விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+