குப்பையில் போட்டாலும் ஆபத்து.. இந்த 17 மருந்துகளை கழிப்பறையில் வீசுங்க! இந்திய மருந்து குழு வார்னிங்
டெல்லி: இந்தக் காலத்தில் நமக்குப் பல்வேறு விதமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்குச் சிகிச்சைக்கு நாம் பல வகையான மருந்துகளையும் எடுத்துக்கொள்கிறோம். இதற்கிடையே 17 வகையான மருந்துகளைப் பட்டியலிட்டுள்ள மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, இந்த மருந்துகளை உடனடியாகக் கழிப்பறையில் வீசிவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நம்மில் பெரும்பாலானோர் வீட்டில் வைத்திருக்கும் மாத்திரைகள் காலாவதியான பிறகு அதைத் தூக்கித் தான் எரிவோம். காலாவதியான பிறகு எதாவது பொருளை எடுத்துக்கொண்டால் அது ஆபத்து என்பதால் மாத்திரைகள் நாம் தூக்கி எரிவோம்.. ஆனால், வீட்டில் காலாவதியான மருந்துகளைத் தூக்கி எறிவதற்கு முன் இருமுறை யோசியுங்கள். ஏனென்றால் காலாவதியான மாத்திரைகளைத் தூக்கி எரிவதும் கூட ஆபத்தாக முடியுமாம்.

பரிந்துரை
இது தொடர்பாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளது. 17 மருந்துகளைப் பட்டியலிட்டுள்ள சிடிஎஸ்சிஓ அமைப்பு, இந்த மாத்திரைகள் காலாவதியான உடன் குப்பைகளில் அல்லது வெளியே தூக்கி எரியக்கூடாது என்றும் கழிப்பறையில் போட்டு ஃபளஷ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 மருந்துகள் என்ன!
இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான மருந்துகள் வலி, பதற்றம் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மாத்திரைகள் ஆகும். மேலும், இதர சிகிச்சைகளுக்குப் பயன்படும் ஓபியாய்டு மாத்திரைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஃபென்டானைல் (Fentanyl), ஃபென்டானைல் சிட்ரேட் (Fentanyl Citrate), டையாசெபம் (Diazepam), புப்ரெனோர்பைன் (Buprenorphine), புப்ரெனோர்பைன் ஹைட்ரோகுளோரைடு (Buprenorphine Hydrochloride) ஆகியவை அந்த லிஸ்டில் உள்ளது.
மேலும், மார்பின் சல்பேட் (Morphine Sulfate), மெத்தடோன் ஹைட்ரோகுளோரைடு (Methadone Hydrochloride), ஹைட்ரோமார்போன் ஹைட்ரோகுளோரைடு (Hydromorphone Hydrochloride), ஹைட்ரோகோடோன் பிடார்ட்ரேட் (Hydrocodone Bitartrate), டேபென்டடோல் (Tapentadol), ஆக்ஸிகோடோன் ஹைட்ரோகுளோரைடு (Oxycodone Hydrochloride) ஆகிய மாத்திரைகளும் இந்த பட்டியலில் உள்ளது.
இது போக ஆக்ஸிகோடோன் (Oxycodone), ஆக்ஸிமார்போன் ஹைட்ரோகுளோரைடு (Oxymorphone Hydrochloride), சோடியம் ஆக்ஸிபேட் (Sodium Oxybate), டிராமடோல் (Tramadol), மெத்தில்ஃபெனிடேட் (Methylphenidate), மெபெரிடின் ஹைட்ரோகுளோரைடு (Meperidine Hydrochloride) ஆகிய மாத்திரைகள் இந்த லிஸ்டில் இருக்கிறது.
கழிப்பறையில் கொட்ட வேண்டும்!
இந்த மருந்துகள் காலாவதியான பிறகு அல்லது தேவையில்லாத போது, கழிப்பறையில் கொட்டுவது பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மருந்துகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால் ஆபத்தானதாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காலாவதியான இந்த மருந்துகளைக் குப்பையில் கொட்டுவதற்குப் பதிலாகக் கழிப்பறையில் வீசிவிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் தவறானவர்கள் கைகளில் சிக்குவது அல்லது தீங்கு விளைவிப்பதைத் தடுக்கவே சிடிஎஸ்சிஓ இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.
ஆபத்தாக மாறும்!
மருத்துவர்கள் யாருக்கு இந்த மருந்துகளை எழுதிக் கொடுத்துள்ளாரோ அவர்கள் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களைத் தவிர வேறு யாரேனும் எடுத்துக் கொண்டால், அவை மிகவும் ஆபத்தாகை மாறும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. சில நேரங்களில் வெறும் ஒரு டோஸ் கூட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் உட்பட மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கவே பயன்படுத்தப்படாத, காலாவதியான அல்லது தேவையற்ற மருந்துகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் தவறான ஆட்கள் கைகளில் சிக்கினால் அதைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இது உயிருக்குமே கூட ஆபத்தாகப் போகலாம் என்பதாலேயே இந்தப் பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத மருந்துகளைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட திட்டங்கள் மாசுபாட்டை அதிகரிக்கும் என்பதாலேயே அவற்றை இதுபோல டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications