உத்தரகண்ட் வெள்ளம்... ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டரில் ஆறுதல்!
டெல்லி: உத்தரகண்ட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட், சேவாக், அக்ஷய் குமார் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மக்களே நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நடிகர் சோனு கூறியுள்ளார்.

உத்தரகண்ட் சோகம்
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பிரதமர் மோடி
அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த சுமார் 100 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். இதேபோல் திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்:- உத்தராகண்ட்டில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்:- உத்தராகண்ட்டில் வெள்ளத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் உதவ இயலும் என நான் நம்புகிறேன்.

சேவாக், அக்ஷய் குமார்
வீரேந்திர சேவாக்:- உத்தராகண்ட் மக்களுடன் பிரார்த்தனை. நீங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கி ஏதாவது உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து பேரழிவு செயல்பாட்டு மைய எண்ணை 1070 அல்லது 9557444486 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நடிகர் அக்ஷய் குமார்:- பனிச்சரிவு காட்சிகள் பயங்கரமாக இருந்தது, அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள்.
நடிகர் சோனு:- உத்தராகண்ட் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்
-
கிலோ முந்திரி வெறும் 50 ரூபாயா? இந்தியாவின் ஆச்சரியமான 'முந்திரி கிராமம்' - ஒரு விசித்திரப் பயணம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications