விரைவில்.. இந்தியா வரும் பைசர், மாடர்னா வேக்சின்.. "லீகல் பாதுகாப்பு" வழக்கும் முடிவில் மத்திய அரசு
டெல்லி: மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களின் வேக்சின்களுக்கு சட்ட ரீதியான லீகல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கும் முடிவில் மத்திய அரசு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்தியாவில் பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் கடந்த வருடம் டிசம்பரிலேயே தங்கள் கொரோனா வேக்சினை விற்க அனுமதி கேட்டு இருந்தது. ஆனால் அப்போது உங்கள் வேக்சினை எங்கள் நாட்டிலும் சோதனை செய்ய வேண்டும், அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே விற்பனைக்கு அனுமதி அளிப்போம் என்று மத்திய அரசு கூறி இருந்தது.
இதனால் வேக்சின் விற்பனைக்காக பைசர் நிறுவனம் செய்திருந்த விண்ணப்பத்தை ரத்து செய்துவிட்டு மற்ற நாடுகளில் வேக்சின் விற்பனை செய்வதில் கவனம் செலுத்தியது. வெளிநாட்டு நிறுவனங்கள் பல இதனால்தான் இந்தியாவில் வேக்சினை விற்க முன் வரவில்லை.

வேக்சின்
இந்த நிலையில் தற்போது இந்தியாவில் வேக்சின் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மாடர்னா மற்றும் பைசர் உள்ளிட்ட வேக்சின்களுக்கு இந்தியாவில் 2 முக்கியமான சலுகைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகிறது. முக்கியமாக indemnity எனப்படும் சட்ட ரீதியான பாதுகாப்பு கொடுக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

லீகல் பாதுகாப்பு
அதாவது இந்தியாவில் மாடர்னா மற்றும் பைசர் வேக்சின்களை எடுத்துக்கொள்ளும் நபர்கள் யாரும், அதனால் பக்க விளைவு ஏற்பட்டு, இந்த நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியாது. இந்த நிறுவனங்களின் வேக்சினுக்கான சட்ட ரீதியான பொறுப்புகளை அரசே ஏற்கும். இந்தியாவில் வேக்சின்களை அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டும் என்பதால் இந்த சலுகையை வழங்கும் திட்டத்தில் இந்தியா இருப்பதாக தெரிகிறது.

லீகல்
அமெரிக்காவில் பைசர் நிறுவனத்திற்கு லீகல் பாதுகாப்பு உள்ள நிலையில் அதே போன்ற பாதுகாப்பை வழங்க மத்திய அரசும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதேபோல் இந்தியாவில் தனிப்பட்ட கொரோனா வேக்சின் சோதனையில் இருந்தும் பைசர், மாடர்னா நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதாவது இந்தியாவில் இந்த வேக்சின்களை சோதனை செய்யாமலே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சோதனை
அனுமதிக்கு பின், பயன்பாட்டிற்கு வர தொடங்கிய பின் சோதனை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த அனுமதி வழங்கப்படும் என்று தகவல்கள் வருகின்றன. அதாவது இந்தியாவில் சோதனை செய்யாமல், அமெரிக்க சோதனை டேட்டா, உலக சுகாதார மையம் கொடுத்த அனுமதியை வைத்து இந்தியாவில் மக்களுக்கு செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முடிவு
ஆனால் இது தொடர்பாக இன்னும் முழுமையான முடிவு எடுக்கப்படவில்லை, இந்திய மருந்து கட்டுப்பட்டு இயக்குனரகம் இது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறது, விரைவில் இதில் முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். தேசிய வேக்சின் வல்லுநர் குழுவின் தலைவர் விகே பாலும், இது தொடர்பாக ஆலோசனை நடப்பதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

விகே பால்
அதேசமயம் மத்திய அரசு இந்த சலுகைகளை வழங்கினாலும் பைசர், மாடர்னா நிறுவனம் இந்த வருடம் இந்தியாவில் வேக்சின் விற்பது கடினம் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே உலக அளவில் நிறைய வேக்சின் ஒப்பந்தங்களை இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதால் இந்தியாவிற்கு வேக்சின் கிடைப்பது கடினம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications