Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆ"... தளங்களை அடியோடு முடக்கிய மத்திய அரசு.. யூடியூபை தேடி ஓடும் ஆபாசகர்கள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    யூடியூபை தேடி ஓடும் ஆபாச பிரியர்கள்... என்ன காரணம் தெரியுமா ?

    டெல்லி: நாடு முழுவதும் ஆபாசப் படப் பிரியர்கள் சத்தமின்றி ஒரு யுத்தத்தில் குதித்துள்ளனர். அவர்கள் இத்தனை காலம் விரும்பிப் பார்த்து வந்த பல முக்கிய ஆபாச இணையதளங்களை மத்திய அரசு முடக்கி விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யூடியூபில் இதெல்லாம் கிடைக்குமா என்று தேடிப் பார்த்து வருகின்றனராம்.

    ஆபாச இணையதளங்களால் சமீபத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதை முடக்குவது குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தற்போது மத்திய அரசு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஆபாச இணையதளங்களை அதி வேகமாக முடக்கி வருகிறது.

    இதுவரை 500க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் ஆபாசப் படத் தளங்களைப் பார்த்து வந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

    ஆபாச இணையதளங்கள்

    ஆபாச இணையதளங்கள்

    இணையதளத்தில் நல்லது ஒரு பக்கம் கொட்டிக் கிடந்தால் அதை விட கொடுமையானது பல மடங்கு கொட்டிக் கிடக்கிறது. இதனால் இணையதளத்தை பார்த்தாலே தப்பாக நம்மைப் பார்க்கும் காலமாக இது மாறியுள்ளது. குறிப்பாக ஆபாசத் தளங்களால் இணையதளமே நாறிப் போய்க் கிடக்கிறது.

    அதிரடி தடை

    அதிரடி தடை

    இப்படிப்பட்ட ஆபாசத் தளங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற சுத்திரம் வேறு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. அதிலும் ஜியோ போன் வந்த பிறகு ஆபாசத் தளங்களைப் பார்ப்போர் பல மடங்கு அதிகரித்து விட்டனர். ஆபாசத் தளங்களை அதிகம் பார்ப்போரில் 18 வயதுக்குட்பட்டோர்தான் அதிகம் என்பது அடுத்த கவலைக்குரிய விஷயம். இதையடுத்து மத்திய அரசு அதிரடி தடையில் இறங்கி விட்டது.

    பல தளங்களை காணவில்லை

    பல தளங்களை காணவில்லை

    அரசின் நடவடிக்கையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட ஆபாசத் தளங்கள் தடுக்கப்பட்டுள்ளனவாம். எக்ஸ்வீடியோஸ் உள்ளிட்ட முக்கியமான ஆபாசத் தளங்களை இப்போது பார்க்க முடியவில்லை. அவை தடை செய்யப்பட்டு விட்டன.

    யூடியூபில் இருக்குமா

    யூடியூபில் இருக்குமா

    இதனால் ஆபாசப் பட விரும்பிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் அலை பாய்ந்து கொண்டுள்ளனராம். அவர்களின் கவனம் யூடியூப் பக்கம் திரும்பியுள்ளது. அங்கு இதுபோன்ற பச்சையான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் கிடைக்காது. ஆனால் அரை குறை காட்சிகள் அடங்கிய வீடியோக்களைப் பார்க்க முடியும். தேட வேண்டும், தேடினால் கிடைக்கும்.

    விதம் விதமாக சர்ச் செய்கிறார்கள்

    விதம் விதமாக சர்ச் செய்கிறார்கள்

    விதம் விதமாக சர்ச் செய்து ஆபாச யூடியூபில் உள்ள அரைகுறை வீடியோக்களை ஆபாச விரும்பிகள் பார்க்கின்றனராம். இதனால் யூடியூபுக்கு வருவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாம். இது மத்திய அரசை கவலைக்குள்ளாக்கியுள்ளதாம். என்னதான் துணி கொண்டு மறைத்தாலும் சூரியன் மறைவதில்லை என்பது போல ஆபாசத்தை தடுக்க தடை நடவடிக்கை வேலைக்கு ஆகாது என்பதை இது நிரூபிப்பதாக உள்ளது.

    என்னவோ போங்கப்பா!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+