ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. தீபாவளி போனஸ் அறிவிப்பு.. மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்..!

ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரயில்வேயில் பணிபுரியும் தகுதி வாய்ந்த அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி கொண்டிருக்கிறது.. இதையடுத்து, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் போனஸ் தருவது வழக்கம்.

கடந்த வருடமும் 2019-2020 ஆண்டுக்கான போனஸ் தொகையாக 78 நாள் ஊதியத்தை கூடுதலாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது..

 அமைச்சரவை

அமைச்சரவை

78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.. அதற்கான நிதி வரைவினையும் மத்திய ரயில்வே அமைச்சகம் முன்வைத்திருந்தது.. அதில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரத்து 951 வரை போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டிருந்ததுடன், அமைச்சரவையின் முடிவு அந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு முன்பே செயல்படுத்தப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியிருந்தது..

ஊழியர்கள்

ஊழியர்கள்

அதுமட்டுமல்ல, கொரோனா காலத்தில் உரங்கள், நிலக்கரி மற்றும் 200க்கும் மேற்பட்ட முக்கிய பராமரிப்புத் திட்டங்களை நிறைவுற்ற ரயில்வே ஊழியர்கள் உதவியதனையும் ரயில்வே அமைச்சகம் நினைவுபடுத்தி, அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அந்த வகையில், இந்த வருடத்திற்கான போனஸை ரயில்வே ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..

போனஸ்

போனஸ்

2020-21ம் நிதியாண்டில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்கலாம் என்று மத்திய அமைச்சரவைக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பான பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது...

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தீபாவளி போனஸ் அறிவிப்பால் 11.56 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்று தெரிவித்தார்.. இதனால் ரயில்வே துறை ஊழியர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.. ரயில்வே துறைக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இனி மற்ற துறைகளிலும் போனஸ் எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+