சுதந்திர தின கொண்டாட்டம் : கொரோனா முன்களப்பணியாளர்களை கவுரவிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவி வருவதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவில் பார்வையாளர்கள் பங்கேற்க அழைக்கப்பட மாட்டார்கள். தனி மனித இடைவெளியோடு கூடிய கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் என்சிசி மாணவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி பேசும் பாதுகாப்பு அரணிற்குள் விஐபிக்களுக்கு அனுமதி இல்லை. சுமார் 100 பேர் மட்டுமே கீழ் தளத்தில் அமர அனுமதிக்கப்பட உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்றுடன் போராடி வெற்றிபெற்ற சுமார் 1500 கொரோனா வெற்றியாளர்கள் இம்முறை சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வார்கள். இதில் 500 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள 1000 பேர் நாட்டின் பல பகுதிகளிலிருந்து அழைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே கொரோனா காலத்தில் சுதந்திர தின கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.
•சுதந்திர தினத்தின் போது பெரிய அளவிற்கு மக்கள் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
•தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சுதந்திர தினத்தை கொண்டாடவும் அறிவுறுத்தல்.
•சுதந்திர தின நாளில் கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்க வேண்டும்
•கொரோனாவில் இருந்து மீண்டவர்களையும் கவுரவிக்கும் விதமாக விழாவிற்கு அழைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications