ஏறுது சம்பளம்..அதைவிடுங்க..அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி அறிவிப்பு..மத்திய அரசின் அடுத்த அதிரடியைபாருங்க
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ஒரு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான கடிதமும், அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளன.. என்ன தெரியுமா?
யோகா இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது.. யோகா ஏதோ ஒரு வடிவத்தில், ஆன்மீக அல்லது ஆரோக்கிய நோக்கங்களுக்காக நன்மை பயப்பதாகவும் உள்ளது.
உற்பத்தி திறன்: அதனால்தான், பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு மன அழுத்தத்தைத் தணிக்கவும், புத்துணர்ச்சியடையவும், அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், பணியிடத்தில் மீண்டும் கவனம் செலுத்தவும் 'யோகா-பிரேக்' என்ற செயலியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தது..
ஆசனங்கள், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5 நிமிட நெறிமுறை இந்த ஆப் மூலம் கிடைக்கும்.. காரணம், அலுவலர்கள் அடிக்கடி மன அழுத்தம் மற்றும் உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விலக்கு அளிக்க, இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.. இது பணியாளர்களுக்கு பணியிடத்தில் ஆறுதல் அளிக்கும்.

இந்நிலையில், இன்னொரு அதிரடியை இந்த வருடம் மத்திய அரசு செய்துள்ளது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு, யோகா பயிற்சியை தரப்போகிறதாம்.. அதுவும், அலுவலகத்திலேயே யோகா பயிற்சியை தரப்போகிறதாம்.. சர்வதேச யோகா தினம் வருகிற ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதனால், அலுவலகப் பணிக்கு இடையே, யோகா பயிற்சி செய்வதற்கான இடைவேளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.
மனஅழுத்தம்: இதற்கு காரணம், நம் நாட்டில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர், மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கெல்லாம் பணிக்கு நடுவே யோகா பயிற்சி செய்ய இடைவெளி அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது... இது சம்பந்தமாக மத்திய அரசின் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், "சர்வதேச யோகா தினம் ஜுன் 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. எனவே, ஆயுஷ் அமைச்சகம் புதிய நடைமுறையை பரிந்துரைத்துள்ளது. இந்த அறிவிப்பானது அலுவலக மற்றும் குடும்ப காரணங்களால் யோகா பயிற்சி செய்ய முடியாமல் இருப்பவர்கள், அலுவலகத்தில் பயிற்சி செய்யலாம்.. இதற்காக தேனீர் இடைவெளி போல யோகா இடைவேளை தரப்படும்.. இதன் மூலம் தங்களுடைய நாற்காலியில் இருந்தபடியே மத்திய அரசு அதிகாரிங்கள் எளிமையாக யோகா பயிற்சி செய்யலாம்.
வழிமுறைகள்: மொரார்ஜி தேசாய் தேசிய யோகா மையம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம், இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த பயிற்சி வழிமுறைகளை வகுத்து இருக்கின்றன. மேலும் இந்த பயிற்சிகள் சுலபமான ஆசனங்கள், பிராணாயாமம் எனப்படும் மூச்சு பயிற்சி, தியானம் என எளிமையாக இருக்கும். இது குறித்து அனைத்து அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்" என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து அமைச்சரகங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கும் இந்த யோகா இடைவேளை தொடர்பாக பரிந்துரை கடிதம் மத்திய அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது... அதாவது, ஊழியர்கள், யோகா இடைவேளையின்போது தாங்கள் உட்கார்ந்திருக்கும் சேரில் இருந்தே, உட்கார்ந்த நிலையிலேயே யோகா செய்வதற்கான வழிமுறையை கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அறிமுகம்: அரசு ஊழியர்கள் பணிச்சுமைக்கு இடையே யோகா பயிற்சி செய்ய தனியாக நேரம் ஒதுக்க முடியாது என்பதால் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அரசு தீர்மானத்துள்ளது எனக் கூறப்படுகிறது.. யோகா இடைவேளை எடுத்துக்கொள்வதன் வாயிலாக மத்திய அரசு ஊழியர்கள், வேலை நேரத்தில் சிறிது நேரம் சின்ன சின்ன யோகா ஆசனங்களை செய்து பார்க்கலாம். யோகா செய்வதால் பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம் தணிந்து, புத்துணர்ச்சி பிறப்பதை உணரலாம் என மத்திய அரசு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
லிங்க்குகள்: மிக எளிமையான யோகாசங்கள் சிலவற்றை செய்து உடலையும் மனதையும் உற்சாகத்துடன் வைத்துக்கொள்ளலாம் எனவும் மத்திய அரசு சொல்கிறது. சேரில் உட்கார்ந்தபடியே அமர்ந்தபடியே செய்யக்கூடிய ஈசியான யோகா பயிற்சிகள் என்னென்ன? அவற்றை எப்படிச் செய்வது என்பதை விளக்கும் யூடியூப் வீடியோக்கள் சிலவற்றையும் மத்திய அரசு பரிந்துரை செய்கிறது. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன பாருங்கள்:
இவை தவிர யோகா இடைவேளை பற்றி மேலும் அறிந்துகொள்வற்கு https://yoga.ayush.gov.in/Y-Break/ என்ற இணையப் பக்கத்தைப் பார்க்கலாம் என்றும் மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மகிழ்ச்சி: 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வானது, 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருவதால், இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துவரும்நிலையில், யோகா தொடர்பான சிறப்பு அறிவிப்பும், கூடுதல் நெகிழ்ச்சியை தந்துவருகிறது.












Click it and Unblock the Notifications