அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் வரப்போகுது.. அகவிலைப்படி எப்போது வரும் தெரியுமா?.. சூப்பர் சான்ஸ் இருக்காமே
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி விரைவில் 4சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியவண்ணம் உள்ள நிலையில், அதுகுறித்து ஒரு மகிழ்ச்சி தகவல் கசிந்துள்ளது.
நாட்டில் உள்ள 47.58 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆண்டுக்கு 2 முறை அதாவது ஜனவரி முதல் ஜுன் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் மாதங்களுக்கு உயர்த்தி அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு: அந்தவகையில், இந்த முறையும், மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ எனப்படும் அகவிலைப்படி நிலுவைத்தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, மத்திய பணியாளர் நலத்துறை அகவிலைப்படியை எவ்வளவு உயர்த்த வேண்டும் என்ற அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியும் வைத்திருக்கிறது.. இதன் அடிப்படையிலேயே அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளது. எப்படியும், இந்த முறை, 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யூகம், உண்மையானால், அகவிலைப்படி தற்போதுள்ள 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதத்தை எட்டும் என்றும் தெரிகிறது.
குறிப்பாக, அகவிலைப்படி 46 சதவீதம் என கணக்கிட்டால், ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ 18,000 இருக்கக்கூடும். தீபாவளியும் வரப்போகிறது என்பதால், இந்த மாத இறுதிக்குள்ளேயே அதாவது செப்டம்பர் மாத இறுதிக்குள் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரப்போகிறதாம்.
எகிறும் சம்பளம்: அறிவிப்பு வெளியானால், அது சம்பளத்தில் ஜூலை 1,2023 இருந்து அமலுக்கு வரும் என்றும், அகவிலைப்படி 3% உயர்வுடன் வரும் என்றும், இதனால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக எகிறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன..
கடந்த மாதம், அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் சிவ கோபால் மிஸ்ரா பேசும்போது, "அகவிலைப்படியில் 4 சதவீத புள்ளிகளை உயர்த்தும், ஆனால், அகவிலைப்படி உயர்வு 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும்... DA 3 சதவீத புள்ளிகள் அதிகரித்து 45 சதவீதமாக இருக்கும்" என்று கூறியிருந்தார்.
தகவல் வரவில்லை: இந்நிலையில் 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து இன்னும் மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.. எனினும், நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அகவிலைப்படி உயர்வு குறித்த விவாதங்கள் நடத்தப்படும் என்றும், இதன் பிறகு அகவிலைப்படி உயர்வு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பை வெளியிட்டவுடன் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடும் என்று ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படுகிறது. இது ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பயனாளிகள்: தற்போதுவரை, பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என, 1 கோடிக்கும் அதிகமானோர் 42 சதவீத அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். விரைவில் அகவிலைப்படியை உயர்த்தி, அறிவிப்பு வெளியானால், ஒரு கோடிக்கும் அதிகமான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் அடையக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications