பெட்ரோல் டீசல் விலை குறையப் போகுதா? எப்போது தெரியுமா? வெளியான முக்கிய தகவல்

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான மற்றும் மக்காசோளம் உள்ளிட்ட சிலவற்றின் மீதான வரிகளை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் பரிந்துரைகளை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான மற்றும் மக்காசோளம் உள்ளிட்ட சிலவற்றின் மீதான வரிகளை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நியூஸ் செய்தி ஒன்றும் வெளியிட்டுள்ளது. அப்படி அரசு முடிவெடுத்தால் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

என்னது பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலையை குறைக்க போறாங்களா.. நல்ல செய்தியாக இருக்கிறதே என்கிறீர்களா.. பொறுங்கள் அவசரப்பட வேண்டும். பிப்ரவரி மாத பணவீக்கத் தரவு வெளியான பிறகுதான் இதுபற்றி முடிவடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் சொல்கின்றன.

இந்தியாவின் வருடாந்திர சில்லறை பணவீக்கம் டிசம்பரில் 5.72% ஆக இருந்து ஜனவரியில் 6.52% ஆக உயர்ந்துள்ளதாக இந்த வாரம் தரவுகள் காட்டுகின்றன. ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்பதை நன்கு அறித்த டெல்லி வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறும் போது "உணவு பணவீக்கம் அதிகமாக இருக்கும், பால், மக்காச்சோளம் மற்றும் சோயா எண்ணெய் ஆகியவற்றின் விலைகள், பணவீக்க கவலைகளை சமீப காலத்தில் அதிகரித்துள்ளது என்றார்கள்.

வரி குறைப்பு

வரி குறைப்பு

"மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளை குறைக்க மத்திய அரசு விரும்புவதாகவும், வரி குறைப்பு 60% அளவிற்கு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருள் மீதான வரிகளும் மீண்டும் குறைக்கப்படலாம்" என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.

எண்ணெய் விலை

எண்ணெய் விலை

இதனிடைய இது தொடர்பாக ராய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு இந்தியாவின் நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடனடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை. சமீப காலங்களில் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் பெரிய அளவில் குறைந்துள்ளது. எரிபொருள் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி செலவு குறைந்துள்ள போதிலும், அதன் பலன்கள் வாடிக்கையாளர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கு போகவில்லை. அதேநேரம் எண்ணெய் விலை குறைந்தாலும் முந்தைய நஷ்டங்களை ஈடுகட்டவில்லை என்பதால் விலை குறைக்கப்படவில்லை என்கிறார்கள்.

விலை குறையுமா

விலை குறையுமா

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இறக்குமதி செய்கிறது. மத்திய அரசு வரிகளை குறைத்தால், பெட்ரோல் பங்கில் சாமானியர்களுக்கு பெட்ரோல் டீசல் விலை குறையும், மத்திய அரசு விரைவில் இந்த விவகாரத்தில் முடிவெடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

பஞ்சாப் அரசு

பஞ்சாப் அரசு

கடந்த ஆண்டு மே மாதம் பெட்ரோல் டீசல் விலை பெரிய அளவில் குறைக்கப்பட்டது, பெட்ரோல் விலை லிட்டருககு 9.50 ரூபாயும், டீசல் விலை 7 ரூபாயும் குறைக்கப்பட்டது. மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் விலையும் கணிசமாக குறைந்தது. அண்மைக்காலமாக பெட்ரோல் டீசல் விலை ஏறவும் இல்லை. அதே நேரம் கடந்த ஆண்டு மத்திய அரசு கலால் வரியைக் குறைத்ததிலிருந்து, சில மாநிலங்கள் எரிபொருட்கள் மீதான வாட் விலையையும் குறைத்தன. சில மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீது செஸ் வரியை அதிகரித்து விலையை உயர்த்தவும் செய்தன. பஞ்சாப் அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 90 பைசா கூடுதலாக செஸ் வரி விதிக்க முடிவெடுத்தது. இதேபோல் கேரள அரசு. அண்மையில பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் மீதான செஸ் வரியை அதிகரித்தது. அதாவது பெட்ரோல் மற்றும் டீசல் மீது லிட்டருக்கு 2 ரூபாய் சமூக பாதுகாப்பு வரி விதித்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+