அட! வேக்சின் சான்றிதழ் டவுன்லோட் செய்வது இவ்வளவு ஈஸியா.. வாட்ஸ்அப் இருந்தாலே போதும்.. விரிவான தகவல்
டெல்லி: இந்த கொரோனா காலத்தில் எங்குச் சென்றாலும் வேக்சின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மிக எளிதாக வேக்சின் சான்றிதழை டவுன்லோட் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு இப்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஓமிக்ரான் பரவல் காரணமாகவே இப்போது கொரோனா பாதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா எனப் பல நாடுகளிலும் தினசரி கொரோனா கேஸ்கள் மீண்டும் உச்சமடைந்து வருகிறது.

அடுத்த அலை
இந்தியாவிலும் ஜனவரி இறுதியில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சமடையத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக 8 லட்சம் வரை செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு ஏற்கனவே மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேக்சின் சான்றிதழ்
தமிழ்நாட்டிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள், வணிக வளாகங்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் அனைத்து வகையான பொது இடங்களுக்குச் செல்லும் போதும், கொரோனா வேக்சின் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதாவது 2 டோஸ் வேக்சின் போட்ட சான்றிதழ் இருந்தால் மட்டுமே திரையரங்கு தொடங்கி அனைத்து பொது இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

எளிய முறை
ஆனால், அவசரமாகக் கிளம்பும் போது, வேக்சின் சான்றிதழை நாம் டவுன்லோட் செய்ய மறந்துவிட்டால் பெரும் கஷ்டம் தான். இதற்காக ஒவ்வொரு முறையும் ஆரோக்கிய சேது அல்லது கோவின் தளத்திற்குச் சென்று டவுன்லோட் செய்து கொண்டிருக்க வேண்டும். இது பல சமயத்தில் பொதுமக்களுக்கு இன்னலை ஏற்படுத்துவதாக உள்ளது. இந்நிலையில், கொரோனா வேக்சின் சான்றிதழை மிக எளிதாக டவுன்லோட் செய்ய புதிய வழிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

வாட்ஸ்அப் போதும்
இந்த முறையில் வேக்சின் சான்றிதழை டவுன்லோட் செய்ய நமக்கு ஆரோக்கிய சேது அல்லது கோவின் என எதுவும் தேவையில்லை, வாட்ஸ்அப் செயலி மட்டும் இருந்தால் போதும்! வெறும் சில நொடிகளில் மிக எளிதாக வேக்சின் சான்றிதழை டவுன்லோட் செய்ய முடிகிறது. மத்திய அரசின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சரி இப்போது எப்படி வேக்சின் சான்றிதழை வாட்ஸ்அப் மூலம் டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

வேக்சின் சான்றிதழ் டவுன்லோட் செய்வது எப்படி
1. முதலில் மத்திய அரசின் 9013151515 உதவி எண்ணை மொபைலில் சேமித்துக் கொள்ளுங்கள்.
2 பின்னர் வாட்ஸ்அப் செயலியில் அந்த எண்ணிற்கு Certificate என்று மெசேஜ் செய்ய வேண்டும்.
3 அப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும், அதை வாட்ஸ்அபில் அனுப்பினால் வேக்சின் சான்றிதழ் வாட்ஸ்அப் செயலிலேயே வரும்.
4 ஒரே மொபைல் எண்ணில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தால், அவர்கள் குறித்த தகவல்கள் வரும்.
5 யாருடைய வேக்சின் சான்றிதழ் தேவை என்று தேர்ந்தெடுத்தால், வேக்சின் சான்றிதழ் வாட்ஸ்அப் செயலிலேயே டவுன்லேட் செய்து கொள்ளலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications