Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச வீடியோக்கள்.. ஒடிடிக்களுக்கு முதல்முறையாக மத்திய அரசு வைத்த ஆப்பு.. ஐந்து நாட்கள் கெடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முதல்முறையாக இந்தியாவில் செயல்படும் மூன்று OTT தளங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மோசமான மாற்றும் ஆபாசமான வீடியோக்களை குறிப்பிட்ட மூன்று ஒடிடி நிறுவனங்களும் உடனே அகற்ற வேண்டும் என்ற தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஒடிடி தளங்களை பொறுத்தவரை வீடியோக்களுக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. சென்சாரும் இல்லை. சென்சார் சான்றிதழ் வாங்கிய பின் ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் இந்து கடவுள்களை அவமதித்ததாக உத்தரப்பிரதேச அரசு அமேசான் பிரைம் மீது வழக்கு போட்டது. அதன்பின்னர் பல்வேறு ஒடிடி வீடியோக்கள் மீது சர்ச்சை எழுந்தது. இதையடுத்து மததிய அரசு, இந்தியாவில் இணையவழி 'ஓவர்-த-டாப்' (ஓடிடி) ஒளிபரப்புச் சேவைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியது. இதனால் சுயமாக ஒடிடி தளங்கள் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Central govt notice to three OTT platforms operating in India for the first time

அதேநேரம் திரையரங்கில் வெளியிட முடியாத காட்சிகளையும் கோர்த்து ஓடிடியில் வெளியிடுவதை பெரும்பாலான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் வழக்கமாக வைத்துள்ளன.. மேலும், ஓடிடி தளங்களில் சமீப காலங்களில் நிறைய வீடியோக்கள்ள மக்களின் உணர்ச்சிகளை காயப்படுத்தும் விதமாக இருப்பதாகக் கூறி பல்வேறு புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் ஆபாசமான மற்றும் இழிவான வீடியோக்களை ஒளிபரப்பியதாகவும், அந்த வீடியோக்களை உடனே நீக்குமாறும் முதல்முறையாக இந்தியாவில் செயல்படும் மூன்று OTT தளங்களுக்கு மததிய அரசு முதல்முறையாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஹண்டர்ஸ், பெஷாரம்ஸ் மற்றும் ப்ரைம் ப்ளே ஆகிய மூன்று ஒடிடி தளங்களுக்கு குறிப்பிட்ட ஆபாச வீடியோவை ஒளிபரப்பு செய்ததாகவும், அதனை நீக்க வேண்டும் அப்படி நீக்க மறுத்தால் அரசின் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

எந்தவொரு OTT தளத்திற்கும் எதிராக இதுவரை மத்திய அரசு ஓடிடிகளுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தை பயன்படுத்தவில்லை. அனால் முதல் முறையாக இந்த சட்டங்களைப் பயன்படுத்தி உள்ளது. மத்திய அரசு அனுப்பிய குறிப்பட்ட நோட்டீஸ்களில் ஐடி விதிகள் 2021 மற்றும் ஐடி சட்டம் 200 இன் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்), 67A (பாலியல் வெளிப்படையான செயலைக் கொண்ட வீடியோக்களை வெளியிடுதல் அல்லது அனுப்புதல்) போன்ற இழிவான செயல்களுக்கு எதிரான பிரிவுகள் உள்ளன. குறிப்பிட்ட வீடியோக்களை நீக்க மத்திய அரசு அந்த மூன்று ஒடிடி தளங்களுக்கு ஐந்து நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பிய மூன்று ஒடிடி தளங்களும் மகாராஷ்டிராவின் தானேவை தளமாகக் கொண்ட வெப்வேர்ல்ட் மல்டிமீடியா பிரைவேட் லிமிடெட் மூலம் நடத்தப்படுகிறது. வெப்சைட் போல் ஒடிடி தளங்கள் திடீரென பதிவு செய்யாமல் முளைப்பதால் இது போன்ற சிக்கல்கள் வருகின்றன. அப்படி உருவாகும் ஒடிடி தளங்கள் அநாகரிகமான வீடியோக்களை காட்டுவதாக புகார்கள் உள்ளன. இந்தியாவில் மொத்தம் 57 OTT ஆப்கள் மட்டுமே முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றவை முறையாக மத்திய அரசிடம் பதிவு செய்யவில்லை.

OTT பிளாட்ஃபார்ம்களில் மோசமான அல்லது ஆபாசமான வீடியோக்ளை வெளியிட்டால், பெண்களை அநாகரீகமாக காட்டுவதற்கு எதிரான 1986ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தக்கூடும் என்கிறார்கள். இந்தச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

முன்னதாக டிஜிட்டல் மீடியா கன்டென்ட் ரெகுலேட்டரி கவுன்சில் (டிஎம்சிஆர்சி) தலைவர் நீதிபதி (ஓய்வு பெற்றவர்) முகுல் முத்கல், கூறுகையில், " ஒடிடி ஆப்கள் சுய-ஒழுங்குமுறை கட்டமைப்பை கடைபிடிக்க வேண்டும். வீடியோக்ககளை வெளியிட அனுமதிக்கும் முன்பு நமது பன்முக சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் உணர்வுகளை மனதில் இருக்க வேண்டும். ஒடிடிக்களில் அவர்கள் விரும்பும் வழியில் கதைகளைச் சொல்ல சுதந்திரம் உள்ளது, ஆனால் பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தி இருந்தார். இந்த அமைப்பில் Disney+Hotstar, Zee5, SonyLiv, Jio Cinema, Voot, Manorama Max, Sun Next, Discovery+, Yupp TV, Nee Stream மற்றும் Fancode ஆகியவை DMCRC இன் உறுப்பினர்களாக உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+