அட்டர்னிஜெனரல் மற்றும் சொலிஸ்டர் ஜெனரலின் பதவிக்காலம் நீட்டிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: மத்திய அரசின் அட்டர்னிஜெனரல் மற்றும் சொலிஸ்டர் ஜெனரல் ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் அதிகாரபூர்வ சொலிஸ்டர் ஜெனரலாக துஷார் மேத்தா இருக்கிறார். அதேபோல் அட்டர்னி ஜெனரலாக கேகே வேணுகோபால் இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது தொடங்கி ரபேல் வழக்கு வரை பல முக்கிய வழக்குகளில் மத்திய அரசு சார்பாக இவர்கள் ஆஜராகி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இவர்கள் இருவரின் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியோடு முடியும் நிலையில் இவர்களின் பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய சொலிசிட்டர் ஜெனரலாக துஷார் மேத்தா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் நியமனக் குழுவால் நியமனம் செய்யப்பட்ட அவரின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். 2018ல் இவர் முதலில் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே. வேணுகோபால் மீண்டும் ஓராண்டிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூலை 1ம் தேதி முதல் அவரின் பதவிக்காலம் தொடங்கும். இவர் 2017ல் தலைமை வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
அதேபோல் மத்திய அரசுக்கு புதிதாக 6 துணை சொலிஸ்டர் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி துணை சொலிஸ்டர் ஜெனரல்கள் பால்பிரி சிங், சூர்யபிராகாஷ் வி ராஜு, ரூபிண்டர் சிங் சூரி, என் வெங்கட்ராமன், ஜயந்த கே சுட், ஐஸ்வர்யா பாட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அளித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications