டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கையிலிருந்து 58 சிறைக் கைதிகள் தமிழக கடல் வழியாக ஊடுருவ திட்டம்.. உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக கடலோர பகுதிகள் வழியாக இலங்கையில் 58 சிறைக் கைதிகள் தப்பி வர திட்டமிட்டிருப்பதால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என மாநில காவல் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் தற்போது அசாதாரண சூழல் நிலவி வருகிறது. நாடே போராட்டக்காரர்களால் பற்றி எரிகிறது. பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.

அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என மக்கள் பெரும் புரட்சி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.

எஸ்கேப் ஆன மகிந்த! அதிபர் இருக்கையில் கம் போட்டு ஒட்டிக்கொண்ட கோத்தபய! பதவி விலகினால் என்ன நடக்கும்?எஸ்கேப் ஆன மகிந்த! அதிபர் இருக்கையில் கம் போட்டு ஒட்டிக்கொண்ட கோத்தபய! பதவி விலகினால் என்ன நடக்கும்?

 வலுக்கும் போராட்டம்

வலுக்கும் போராட்டம்

மக்கள் போராட்டம் வலுக்கிறது. ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் வெளிநாடு தப்பிச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் பெரும் கலவரம் நடைபெற்று வரும் நிலையில் மகிந்த ராஜபக்ச கடற்படை தளத்தில் தஞ்சமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 50 க்கும் மேற்பட்டோர்

50 க்கும் மேற்பட்டோர்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஆரம்பித்த நாள் முதலே அங்குள்ள மக்கள் தமிழகம் நோக்கி தஞ்சமடையத் தொடங்கிவிட்டார்கள். இன்று வரை 50 க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உடைமைகளை விட்டுவிட்டு தப்பித்தால் போதும் என கை குழந்தைகளை அழைத்துக் கொண்டு தமிழக கடற்கரை வழியாக வருகிறார்கள்.

கட்டுக்கடங்காத சூழல்

கட்டுக்கடங்காத சூழல்

தற்போது இலங்கையில் கட்டுக்கடங்காத சூழலை பயன்படுத்தி அகதிகளுடன் தேச விரோதிகளும் நுழையலாம் என மத்திய உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தப்பிய 58 சிறைக்கைதிகள் தமிழகத்திற்குள் கடல்வழியாக நுழைய வாய்ப்பிருப்பதாக உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Recommended Video

    SriLanka நிலைமை இது தான் | தமிழர்கள் சாபம் சும்மா விடுமா? | Oneindia Tamil
    தமிழக கடலோர பகுதிகள்

    தமிழக கடலோர பகுதிகள்

    மேலும் தமிழக கடலோர பகுதிகளில் உஷார்படுத்தவும் மாநில காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழக கடலோர காவல் படை தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்களின் உதவியையும் நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    Centre alerts TN as anti national elements from lanka may infiltrate in Tamilnadu coastal areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X