டெல்லிக்கு ரயில்களை ரத்து செய்த மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் கொடுத்த முக்கிய உத்தரவு! பாஜக ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாளை டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்திற்கு காக்ரோச் ஜனதா கட்சி அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கி, டெல்லிக்குள் நுழையும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், இது குறித்த உச்சநீதிமன்றம் மிக முக்கிய அறிவுறுத்தலை கொடுத்திருக்கிறது.

டெல்லிக்கு வரும் ரயில்கள் ரத்து மற்றும் மெட்ரோ நிலையங்கள் மூடப்படுவது போன்ற அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூரிய காந்த் கவலை தெரிவித்துள்ளார்.

Centre Cancels Trains to Delhi

போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள், பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. குறிப்பாக போராட்டக்காரர்களுடன் சமூக விரோத அல்லது தேச விரோத சக்திகள் ஊடுருவ கூடும் என்று அச்சம் இருந்தால்.. அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முழு உரிமை உண்டு. ரயில் மற்றும் மெட்ரோ நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. பிற பாதுகாப்பு வழிமுறைகளையும் அரசு பயன்படுத்தலாம்.

ஆனால், அதே நேரத்தில் சாதாரண பொது மக்களுக்கு, பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் ரயில் நிலையங்களை அணுகவும் உரிமை உள்ளது என்று தலைமை நீதிபதி சூரிய காந்த் தெளிவாக கூறியிருக்கிறார்.

டெல்லியில் மூடப்பட உள்ள சாலைகள் சாலைகளை மறு ஆய்வு செய்யக்கோரிய தலைமை நீதிபதி, போக்குவரத்து தடைகள் இருக்கும் இடங்களில் பயணிகளுக்கு மாற்றுப்பாதைகள் குறித்து முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மற்றும் நொய்டா போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை, சில்லா எல்லையில் குவிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லை இன்று இரவு 9 மணி முதல் முழுமையாக சீல் வைக்கப்பட உள்ளது. சட்டம் ஒழுங்கை உறுதி செய்ய சீலாம்பூர் மற்றும் கோகல்பூரி ஆகிய பகுதிகளில் டெல்லி போலீசார் பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்தியுள்ளனர். நாளை நடக்க இருக்கும் போராட்டத்தை முன்னிட்டு டெல்லி காவல்துறை பொது மக்களுக்கு கடிதம் மூலம் நிலைமையை விளக்கியிருக்கிறது.

ஆனால், மத்திய அரசின் இந்த ரயில் ரத்து மெட்ரோ நிலையங்கள் மூடல் மற்றும் தங்களது அமைப்பினரை சட்டவிரோதமாக தடுப்பு வைத்திருப்பதால் போராட்டத்தை முழுமையாக தடுத்துவிட முடியாது என்று காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தெரிவித்திருக்கிறார். எந்த தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணி நடக்கும் என்று அவர் உறுதியாக கூறி இருக்கிறார்.

டெல்லியில் போராட்டக்காரர்களை தடுக்க 37 சோதனை சாவடிகளும் போராட்டக்காரர்களை அடைத்து வைப்பதற்காக 15 தற்காலிக தடுப்பு முகாம்களும் அமைக்கப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதை விமர்சித்துள்ள தீப்கே, எங்களுக்கு இதெல்லாம் போதாது என்று கூறியிருக்கிறார். தற்போது டெல்லியில் நடக்கும் விஷயங்களை எல்லாம் வைத்து பார்க்கும் போது.. டெல்லி புதிதாக போருக்கு தயாராவதை போன்று இருப்பதா பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+