ராமர் கோவில், இந்துத்துவா கொள்கைகளைவிட உ.பி.யில் பாஜக வெல்ல கை கொடுத்த மத்திய அரசின் திட்டங்கள்
டெல்லி: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அயோத்தி ராமர் கோவில், இந்துத்துவா கோட்பாடுகளைவிட மத்திய அரசின் திட்டங்கள்தான் பாஜக வெல்ல கை கொடுத்ததாக தேர்தலுக்குப் பிந்தைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. உ.பி.யில் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. அம்மாநில முதல்வராக மீண்டும் யோகி ஆதித்யநாத் பதவியேற்க உள்ளார்.
இதனிடையே உத்தரப்பிரதேச தேர்தலில் மக்கள் எதனடிப்படையில் வாக்களித்தனர் என்பது குறித்து Lokniti-CSDS ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் வழக்கமான பாஜகவின் இந்துத்துவா கோட்பாடுகளைவிட மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள்தான் வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கிஷான் சம்மான் நிதி, உஸ்வாலா திட்டம், பிரதமர் ஆவாஸ் யோஜனா, இலவச ரேஷன் பொருட்கள் போன்றவை வாக்காளர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விவசாயிகள், பிராமணரகள், தலித்துகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களையும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் சென்றடைந்திருப்பதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக 38% பேர் தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயல்பாடுகளை கவனத்தில் கொண்டு வாக்களித்ததாக 10% பேர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் ராமர் கோவில், இந்துத்துவா கோட்பாடுகளுக்காக பாஜகவுக்கு 2% பேர் மட்டுமே வாக்களித்துள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.
2017-ம் ஆண்டை ஒப்பிடுகையில் பாஜக அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது என்கிறது இந்த ஆய்வு.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications