12-18 வயதினருக்காக.. விரைவில் வருகிறது சைடஸ் கேடிலா தடுப்பூசி.. மத்திய அரசின் குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: குஜராத்தின் அகமதாபாத் அருகே சங்கோதர் பகுதியில் இயங்கி வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் ZyCoV-D(சைகோவ்-டி) என்ற கொரோனா தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை 28,000 தன்னார்வலர்களுக்கு செலுத்தி தீவிர பரிசோதனை நடந்தன.

இதில் 3 கட்ட பரிசோதனைகளும் முடிவடைந்துள்ளன. சைகோவ்-டி கொரோனா தடுப்பூசியானது புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் திறன் கொண்டவை என்று சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்து இருந்தது.

சைடஸ் கேடிலா தடுப்பூசி

சைடஸ் கேடிலா தடுப்பூசி

சைகோவ்-டி தடுப்பூசியின் அவரச கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும்படி சைடஸ் கேடிலா நிறுவனம் , இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில் 12-18 வயதுடைய குழந்தைகளுக்கான சைடஸ் கேடிலாவின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 குழந்தைகளுக்கான தடுப்பூசி

குழந்தைகளுக்கான தடுப்பூசி

சைடஸ் கேடிலா நிறுவனம் தனது சைகோவ்-டி தடுப்பூசியை 12 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கும் பரிசோதித்து வெற்றி கண்டுள்ளது. தங்கள் தடுப்பூசி குழந்தைகளுக்கு பக்க விளைவுகள் ஏற்படுத்தாமல், கொரோனாவில் இருந்து காப்பாற்றும் வீரியம் கொண்டது என்று சைடஸ் கேடிலா நிறுவனம் கூறி இருந்தது. இதனால் தான் சைகோவ்-டி தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படுவது குறித்து மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் சொல்வது என்ன?

அதிகாரிகள் சொல்வது என்ன?

எனவே இத்தியாவில் சைடஸ் கேடிலாவின் சைகோவ்-டி தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஒப்புதல் அளித்து விட்டால் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

5-வது தடுப்பூசி

5-வது தடுப்பூசி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், பாரத் பயோடெக்கின் கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட மாடர்னா ஆகியவற்றிற்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சைகோவ்-டி 5-வது தடுப்பூசியாக மாற இருப்பது குறிப்பிடத்தக்கது. 2 முதல் 18 வயதுக்குட்பட்ட தன்னார்வலர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள பாரத் பயோடெக்கிற்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+