ரேஷன் கடைகளுக்கு வாயில் நுழையாத இந்தி பெயரை மாற்றுகிறதா மத்திய அரசு? முதலில் 60 கடைகளுக்காம்!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முதல் கட்டமாக 60 கடைகளுக்கு சோதனை முறையில் பெயரை மாற்றவுள்ளதாகவும் தெரிகிறது.
ரேஷன் கடைகளுக்கு "ஜன் போஷான் கேந்த்ராஸ்" என பெயரிட முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி குஜராத், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 60 கடைகளுக்கு பெயர் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சோதனை முறை வெற்றி அடைந்தால் நாடு முழுவதும் ரேஷன் கடைகளுக்கு இந்த பெயரே சூட்டப்படும் என தெரிகிறது. ஆனால் இதற்கு தென் மாநிலங்களான கேரளா, புதுவை, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே குற்றவியல் சட்டங்களுக்கு இந்தி பெயர்களை வைத்துள்ளதால் அதை எப்படி பயன்படுத்துவது என்ற எதிர்ப்பு எழுந்துள்ளது. அது போல் பல இடங்களில் இந்தி திணிப்பு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இந்தியில் பெயர் பலகைகள் இருப்பதால் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் நியாய விலைக் கடைகள் என சொல்லப்படும் ரேஷன் கடைகளுக்கு ஜன் போஷான் கேந்த்ராஸ் என பெயரிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. முதல் கட்டமாக குஜராத், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 60 கடைகளின் பெயர்கள் மாற்றப்படுகிறது.
இந்தியாவில் ரேஷன் விநியோக திட்டம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை அரசு கொடுத்து வருகிறது.
தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு மானிய விலையிலும் விலையில்லாமலும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள் ஒரு அடையாள அட்டையாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த ரேஷன் கார்டுகளுக்கு நிறைய சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நிறைய விலையில்லா பொருட்களை கொடுத்துள்ளனர். அது போல் திருமண உதவி திட்டம், கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை ரூ 12 ஆயிரம் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
அது போல் பொங்கல் தொகுப்பு பொருட்கள், வெள்ள நிவாரணம், கொரோனா உதவித்தொகை உள்ளிட்டவையும் இந்த ரேஷன் கார்டுகளை வைத்து வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டுகள், சர்க்கரை அட்டை, சுகர் கார்டு, ஸ்மார்ட் கார்டு என வசதிக்கு தகுந்தாற் போல் மக்கள் அழைத்து வருகிறார்கள். அது போல் ரேஷன் கடை, நியாய விலை கடை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் வாயில் நுழைந்த ஒரு இந்தி பெயரை ரேஷன் கடைகளுக்கு வைப்பதை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பார்கள் என தெரிகிறது.
-
தாயுமானவர் திட்டம்! இன்றும் நாளையும் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications