டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர்.. உத்தரவிட்ட நீதிபதி முரளிதர் பஞ்சாப் ஹைகோர்டுக்கு அதிரடியாக இடமாற்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Recommended Video

    செய்தி தெரியுமா | 27-02-2020 | Oneindia tamil Morning news

    டெல்லியில் திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையில் பாஜக தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து மத்திய அரசையும், டெல்லி போலீஸையும் சரமாரியாக விமர்சித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் & ஹரியானா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 19ம் தேதி கொலிஜியம் அளித்த பரிந்துரையை ஏற்று நீதிபதி முரளிதர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    Centre Notifies Transfer Of Justice Muralidhar From Delhi HC To Punjab&Hariyana HC

    இதற்கிடையில் டெல்லியில் வெறுப்பை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவது தொடர்பான வழக்கை இனி நீதிபதி முரளிதர் விசாரிக்க மாட்டார் என தெரிக்கப்பட்டுள்ளது. .

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடக்கோரி ஹரிஷ் மாண்டர் என்பவர் தாக்கல் செய்த மனுவைத்தான் நேற்று நீதிபதி முரளிதர் விசாரித்தார்.

    Centre Notifies Transfer Of Justice Muralidhar From Delhi HC To Punjab&Hariyana HC

    ஆனால் டெல்லி உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான டிஎன் படேல், சிஎஸ் சிஸ்டானி ஆகியோர் இல்லாத காரணத்தால் , நீதிபதி முரளிதர் மூன்றாவது நீதிபதியா அந்த வழக்கை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    நேற்றைய விசாரணையின் போது அவர் எழுப்பிய சரமாரி கேள்விகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீதிபதி முரளிதர் பாஜக தலைவர்கள்மீதான எப்ஐஆர் வழக்கை விசாரிக்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒருபுறம் எனில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    English summary
    On the day, Justice Muralidhar of Delhi HC grilled Centre & Delhi Police over violence in NCR and inaction against BJP leaders for their communal/hate speeches, Govt issues notification effecting his transfer to Punjab and Haryana HC. Collegium recommended his transfer on Feb 19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X