டெல்லி ராஜ்பாத் பெயர் மாற்றம்.. இனி கர்த்தவ்யா பாதை என அழைக்கப்படும்.! என்ன அர்த்தம் தெரியுமா
டெல்லி: தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ராஜ்பாத் பகுதியின் பெயரை மாற்றுவது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளையில் இருந்து இந்தியா கேட் வரையிலான மூன்று கிலோமீட்டர் நீளச் சாலை ராஜ்பாத் என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவும் சுதந்திர தின விழாவும் இங்கு தான் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
சென்டிரல் விஸ்டா திட்டத்தின் கீழ் இந்த ராஜ் பாத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய அரசு செயலகம், பிரதமர் அலுவலகம், துணை குடியரசுத் தலைவர் குடியிருப்புகளை உள்ளடக்கி இந்த சென்டிரல் விஸ்டா திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.

டெல்லி ராஜபாத் முதல் இந்தியா கேட் வரையிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் ஏற்கனவே முடிக்கப்பட்டு உள்ளது. இதனை வரும் 8ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் ராஜ் பாத்தை கர்த்தவ்யா பாத் என்று பெயர் மாற்றி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக வரும் 7ஆம் தேதி நடக்கும் புது டெல்லி முனிசிபல் கவுன்சில் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கர்தவ்யா பாதை நேதாஜி சிலை முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான கட்டிடங்களைக் கொண்டதாகும். கர்தவ்யா பாதை என்றால் கடமை பாதை என்று பொருளாகும்.
முன்னதாக நாட்டின் சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் பிரிட்டஷ் ஏகாதிபத்தியத்தைக் குறிப்பிட்டும் சின்னங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications