பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம்....பணமதிப்பிழப்பால் அனுபவித்த அதே அவஸ்தைதான்... ராகுல் சுளீர்
டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நாட்டு மக்கள் அனுபவித்த அதே துயரத்தைத்தான் மத்திய பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தால் இப்போதும் அனுபவிக்கின்றனர் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
ராகுல் காந்திக்கு லேசான அறிகுறிகளுடன்ன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

ராகுல் வேண்டுகோள்
மேலும் தம்முடன் தொடர்பில் இருந்தவர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாகவே ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.

ஆக்சிஜன் பற்றாக்குறை
நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை உருவானதற்கு பாஜக அரசை விமர்சித்திருந்தார் ராகுல். அத்துடன் மத்திய பாஜக அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமானது 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் மக்களுக்கு எத்தகைய பாதிப்பை இப்போது ஏற்படுத்தி இருக்கிறது எனவும் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார் ராகுல் காந்தி.

நடுத்தெருவில் மக்கள்
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, கொரோனா தடுப்பூசி திருவிழா என்ற மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் இப்போது மீண்டும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க நேரிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது பணம், வாழ்க்கை, பாதுகாப்பு என அனைத்தையும் இழந்து வரிசையில் நிற்க கடைசியாக சில தொழிலதிபர்கள்தான் ஆதாயம் அடைகின்றனர் என்றார்.

மத்திய அரசின் பாரபட்சம்
மேலும் மத்திய அரசின் திட்டத்தால் 18 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைக்காமல் போகும். கொரோனா தடுப்பூசிகளின் விலைகள் இடைத் தரகர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமானது பாரபட்சமானதாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications