கொரோனாவை பயன்படுத்தி போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு- டெல்லி விவசாயிகள் பரபர புகார்
டெல்லி: கொரோனா பரவலை பயன்படுத்தி டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கலாம் என மத்திய அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம்ம்சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் இடைவிடாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர் விவசாயிகள்.

டெல்லியின் எல்லைகளில் நடத்தப்பட்டு வரும் இந்த போராட்டத்தை கொரோனா பரவலை முன்வைத்து முடிவுக்கு கொண்டுவரலாம் என மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ் கூறியதாவது:
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் எல்லைகளில் கொரோனா கால கட்டுப்பாடுகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் கொரோனா பரவல் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். அதேபோல் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம். கொரோனா பரவுகிறது என்பதை காரணமாக வைத்து எங்கள் போராட்டத்தை முடிக்க வைக்கலாம் என மத்திய அரசு நினைக்கிறது.
கடந்த ஆண்டும் கூட இதேபோலவே முயற்சித்தார்கள். ஆனால் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு யோகேந்திர யாதவ் கூறினார்.
-
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம்












Click it and Unblock the Notifications