முடிச்சிவிட்டீங்க போங்க! ரூ.5 லட்சம் கொடுத்து டிக்கெட் எடுத்தா.. இப்படி பண்ணிட்டீங்களே! புலம்பிய CEO

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து, முதல் வகுப்பில் டெல்லி வரை பயணித்த தனியார் நிறுவனத்தின் சிஇஓ, ஏர் இந்தியா விமானத்தின் சேவையை சரமாரியாக விமர்சித்திருக்கிறார்.

சாதாரணமாக ஆம்னி பேருந்தில் ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து பயணிக்கும் போது, ஏசி சரியாக வரவில்லை என்றாலோ, சீட் சரியில்லை ஓட்டுநரை சகட்டு மேனிக்கு திட்டிவிடுவோம். இதே லட்சக்கணக்கில் கொடுத்து டிக்கெட் எடுக்கும்போது அந்த பயணம் சரியாக இல்லையென்றால் நமக்கு எப்படி கோபம் வரும்? அப்படி ஒரு சூழலைத்தான் தனியார் நிறுவனத்தின் சிஇஒ ஒருவர் எதிர்கொண்டிருக்கிறார்.

air india usa

அதாவது, அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து டெல்லிக்கு வர, முதல் வகுப்பில் ஏர் இந்தியா விமானத்தில் படேல் எனும், தனியார் நிறுவன சிஇஓ டிக்கெட் போட்டியிருக்கிறா். மொத்தம் 12 ஆயிரம் கி.மீ தொலைவு. ஏறத்தாழ 15 மணி நேர டிராவல். மொத்தமாக டிக்கெட்டுக்கு ரூ.5.19 லட்சத்தை கொடுத்திருக்கிறார்.

பயண நாளும் வந்தது. விமானத்தில் முதல் வகுப்பு எனில், பிரமாதமாக இருக்கும் என்று அவர் கற்பனை செய்திருந்தார். ஆனால், இவரது எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக இந்த பயணம் அமைந்திருக்கிறது. அதாவது, இவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த கேபின் மிகவும் பழுதடைந்திருக்கிறது. அதேபோல இவரது சீட்டில் தலை முடியும், குப்பைகளும் சிதறியிருக்கின்றன. பாட்டு கேட்க பயன்படுத்தப்படும் ஹெட்போன்கள் உடைந்து போயிருக்கின்றன. இவை அனைத்தையும் படேல் வீடியோவாக பதிவு செய்து அதை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருக்கிறார்.

வழக்கமாக ஏர் இந்தியா சேவையில் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும் என்றும், ஆனால் இந்த அளவுக்கு மோசமான சேவையை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் படேல் தனது வீடியோவில் குறிப்பிடிருக்கிறார். வீடியோவில் உணவு குறித்து குறிப்பிட்டுள்ள அவர், வழக்கமாக வழங்கப்படும் உணவுகளில் 30% உணவுகள் வழங்கப்படவில்லை. அதேபோல, சமோசாவும், சூப்பும் ஓரளவுக்கு நன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

முதல் வகுப்பு எனில், அதில் அனைத்து வசதிகளும் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக வாங்கும் காசுக்கு தரமான சேவை வழங்கப்பட வேண்டும். ஆனால், அப்படி வழங்க தவறுவது சட்டப்படி குற்றம் என்று இந்த வீடியோவை பார்த்த பலரும் கூறியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே விமான சேவையின் தரம் தொடர்ந்து கேள்விக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. சீட் இல்லாமல் இருப்பது, அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது என விமான சேவை குறித்து பல்வேறு தரப்பினரும் வீடியே வெளியிட்டு கொந்தளித்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது தனியார் நிறுவன சிஇஒவும், "முடிச்சி விட்டுடீங்க போங்க" என்கிற ரீதியில் தான் எதிர்கொண்ட மோசமான பயணத்தை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+