இலையில் பந்து போல் ஏதோ விழுகிறது.. உற்று பார்த்தால் பச்சோந்தி குட்டி.. பிறந்தவுடன் சுறுசுறுப்பு
டெல்லி: பச்சோந்தி ஒன்று குட்டியை ஈனும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு களித்துள்ளனர்.
Recommended Video
மனிதர்களில் மாறுபட்ட குணங்களை கொண்டவர்களையும் ஆளுக்கேற்ப தங்களது குணாதிசயத்தை மாற்றிக் கொள்வோரையும் பச்சோந்தி என கூறுவதை கேள்விப்பட்டுள்ளோம்.
ஆனால் பச்சோந்தி எதிரிகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ள இது போல் நிறம் மாறுகின்றன. இவை பல்லி இனத்தை சேர்ந்தவை. இவை குஞ்சுகளை உடலில் சுமந்து உரிய நேரத்தில் குட்டிகளை ஈனும் தன்மை கொண்டவையாகும்.

குட்டி
இதுபோல் குட்டி ஈனும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பச்சோந்தி ஒன்று குட்டியை ஈனும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் இந்த வீடியோவை கண்டு களித்துள்ளார்கள். அந்த வீடியோவில் ஒரு பச்சோந்தி மரத்தின் கிளையை பற்றி கொண்டு நிற்கிறது.

தாவும் குட்டி
அப்போது சிறிது நேரம் கழித்து தனது குட்டியை ஈனுகிறது. பந்து வடிவத்தில் உருளையாக கீழே விழும் குட்டியானது கிழிந்த இலையில் விழுந்து அதன் மேலுள்ள தோல் கிழிந்து குட்டி பச்சோந்தியாக உருமாறுகிறது. பின்னர் அக்கம் பக்கம் தாவிக் கொண்டிருக்கிறது.
|
வீடியோ வைரல்
சுறுசுறுப்பாக இயங்கும் அந்த குட்டி தனது கால்கள் மூலம் அருகே உள்ள இலையை பிடிக்க முயற்சிக்கிறது. ஆனால் அது தோல்வி அடைகிறது. அதனால் பிறகு முயற்சிக்கலாம் என நினைத்து அந்த இலையிலேயே பற்றிக் கொள்கிறது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

வெள்ளை திமிங்கலம்
இது போல் அரிய வகை காட்சிகளை நேச்சர் இஸ் ஸ்கேரி என்ற ட்விட்டர் அக்கவுண்ட் மக்களுக்கு வெளியிடுகிறது. இது போல் தண்ணீரில் வெள்ளை திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்ற காட்சிகளையும் பார்த்துள்ளோம். இயற்கையின் முன்பு எல்லாமே அழகும் அதிசயமும்தான்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications