சண்டிகர் மேயர் தேர்தல்: வாக்கு சீட்டில் என்ன செஞ்சீங்க.. அதிகாரியை நேரில் விளாசிய உச்சநீதிமன்றம்!
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷியை நேரில் ஆஜராக வைத்து சரமாரியாக கேள்விகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் எழுப்பி கண்டனம் தெரிவித்தது. மேலும் இந்த விசாரணையின் போது வாக்கு சீட்டில் என்ன செய்தீர்கள்? வீடியோவில் தான் எல்லாமே பதிவாகி இருக்கிறதே எனவும் கண்டனம் தெரிவித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
பஞ்சாப் மற்றும் சண்டிகர் மாநிலங்களுக்கு பொது தலைநகராக இருப்பது சண்டிகர். இதன் மாநகராட்சி மேயர் தேர்தல் அணையில் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக ஒரு பக்கம், இந்தியா கூட்டணியின் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இன்னொரு பக்கம் களம் கண்டன.

இத்தேர்தலை பாஜகவை சேர்ந்த அதிகாரி அனில் மாக்ஷி நடத்தினார். இத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 16 ஓட்டுகளும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு 20 ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால் இந்தியா கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது என தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி அறிவித்தார். இதனால் பாஜக வேட்பாளர் மேயர் தேர்தலில் வென்றதாகவும் அறிவிக்கப்பட்டு அப்போதே மேயர் நாற்காலியில் அமரவும் வைக்கப்பட்டார். இந்த அப்பட்டமான தேர்தல் முறைகேடு பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
மேலும் வாக்குச் சீட்டுகளில் தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி குறியீடுகளை பதிவு செய்யும் வீடியோவும் வெளியானது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் பெஞ்ச், சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகப் படுகொலை நடந்துள்ளதாக கடுமையாக கண்டனம் தெரிவித்தது. மேலும் தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மாக்ஷி ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டாம்; ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை வைத்து மறு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அதிகாரி இத்தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதிவான வாக்கு சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராகவும் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சண்டிகர் மேயர் பதவிக்கு மறுதேர்தல் நடத்த வேண்டாம்; ஏற்கனவே நடந்த தேர்தலில் பதிவான வாக்கு சீட்டுகளை வைத்து மறு எண்ணிக்கை நடத்தலாம்; ஆனால் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அதிகாரி இததேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி அனில் மாக்ஷி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பதிவான வாக்கு சீட்டுகளுடன் உயர்நீதிமன்ற பதிவாளர் நாளை ஆஜராகவும் உத்தரவிட்டது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன? -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications