பாஜகவை வீழ்த்த ராகுலை சந்தித்த கையோடு மாயாவதியையும் அகிலேஷையும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!
டெல்லி: பாஜகவை வீழ்த்துவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் சந்திப்பு நடத்திய கையோடு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.
வரும் 23-ஆம் தேதி நாட்டை ஆள போவது யார் என்பது குறித்த முடிவுகள் வெளியாகவுள்ளன. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்படுகிறது. இதனால் எப்படியும் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜகவை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு வருகின்றன. இதில் மும்முரமாக இருப்பவர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இவர் நேற்றைய தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார் நாயுடு. கேஜரிவால், சீதாராம் யெச்சூரியை சந்தித்து பேசிய நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷையும் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.
கடந்த லோக்சபா தேர்தலில் ராகுலுக்கு எதிராக பிரசாரம் செய்த சந்திரபாபு நாயுடு, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காததால் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தற்போது ராகுலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications