திடீரென டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த சந்திரபாபு நாயுடு மகன்.. ஆந்திர அரசியலில் திருப்பம் வருமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் நாரா லோகேஷ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியுள்ளது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது பதவிக்காலத்தின் போது திறன் வளர்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக ஆந்திர மாநில சிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Chandrababu naidu son nara lokesh met amit shah

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமராவதி உள்வட்டசாலை முறைகேடு, ஃபைபர் நெட் முறைகேடு மற்றும் அங்கல்லு வன்முறை வழக்கு ஆகிய 3 வழக்குகளில் அவரை கைது செய்ய ஜெகன்மோகன் தலைமையிலான ஆந்திர மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து இந்த 3 வழக்குகளிலும் முன்ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வழக்குகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஃபைபர் நெட் முறைகேடு வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது இன்று உத்தரவு பிறக்கப்பட உள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடு தரப்பினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இதற்கிடையே, சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், "இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் உயிருக்கு சிறையில் வைத்து ஆபத்தை ஏற்படுத்த அரசு திட்டம் தீட்டுகிறது. சந்திரபாபு நாயுடுவுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை. கொசுக்கள் அதிகம் என்று சிறை அதிகாரிகளிடம் கூறினாலும் அதை பொருட்படுத்துவதில்லை.

சிறையில் ரிமாண்ட் கைதியாக இருந்த ராஜமுந்திரி கிராமிய மண்டலம் தவளேஸ்வரத்தைச் சேர்ந்த கஞ்செட்டி வீரவெங்கட சத்தியநாராயணா டெங்குவால் உயிரிழந்தார். சந்திரபாபுவுக்கும் இதேபோன்று செய்ய ஜெகன் மோகன் ரெட்டி சூழ்ச்சிகள் செயல்படுத்தி வருகிறார். சந்திரபாபுவுக்கு என்ன நடந்தாலும் அதற்கு ஜெகன் மோகன் தான் பொறுப்பு" என தெரிவித்து பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டிருப்பதாகவும், பழிவாங்கல் நடவடிக்கைக்காக ஜெகன் மோகன் அரசு ஆட்சியை தவறாக பயன்படுத்தி வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளார் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும், ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள சூழலில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ், அமித் ஷாவை சந்தித்தது அனைத்து தரப்பினராலும் உற்றுநோக்கப்படுகிறது. இந்தச் சந்திப்பின்போது மாநில பாஜக தலைவர் புரந்தேஸ்வரி, அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோரும் உடனிருந்தனர்.

2018 ஆம் ஆண்டில் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக தலைமையிலான என்டிஏவுடன் உறவை முறித்துக் கொண்டது தெலுங்கு தேசம் கட்சி 2019 தேர்தலில், தெலுங்கு தேசம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், அமித் ஷா உடனான நாரா லோகேஷின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுடன் முறையான கூட்டணி இல்லாவிட்டாலும் பாஜகவுக்கும் நட்புறவு உள்ளது. சர்ச்சைக்குரிய டெல்லி சேவைகள் மசோதா உட்பட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, ​​தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டும் நாடாளுமன்றத்தில் மோடி அரசுக்கு ஆதரவாக இருந்தன. மோடி அரசுக்கு எதிராக 26 கட்சிகள் கொண்ட 'இந்தியா' கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக நின்றனர்.

தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டும் பாஜகவுடன் இணக்கமாக உள்ள நிலையில், நாரா லோகேஷின் கோரிக்கையை பாஜக அரசு எப்படி அணுகப்போகிறது? சந்திரபாபு நாயுடு விவகாரத்தில் அடுத்தகட்டம் என்னவாக இருக்கும் என்ற விவாதங்கள் ஆந்திர அரசியலில் அலையடித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+