நாசா எப்படி உள்ளே வந்தது? சந்திரயான் 2 மூலம் அமெரிக்கா நிலவிற்கு அனுப்ப போகும் ஸ்பெஷல் பார்சல்!
சந்திரயான் 2 உடன் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் நிலவிற்கு ஸ்பெஷல் பார்சல் ஒன்றை அனுப்ப உள்ளது.
Recommended Video
டெல்லி: சந்திரயான் 2 உடன் அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் நிலவிற்கு ஸ்பெஷல் பார்சல் ஒன்றை அனுப்ப உள்ளது.
இஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. சரியாக 2.54 நிமிடத்திற்கு சந்திராயன் விண்ணில் ஏவப்படும்.
செப்டம்பர் 6ம் தேதி நிலவின் வட்டப்பாதையை சந்திராயன் 2 அடையும். அதன்பின் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் சந்திரயான் 2 தரையிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன செல்கிறது
சந்திரயான் 2ல் மூன்று முக்கிய சாதனங்கள் உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்றும் உள்ளது.

வேறு என்ன
இது மட்டுமில்லாமல் மொத்தம் வேறு 10 பொருட்களையும் சந்திரயான் 2 நிலவிற்கு கொண்டு செல்கிறது. சந்திரயான் 2 ஐரோப்பாவில் இருந்து மூன்று, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் இருந்து இரண்டு கருவிகளை நிலவிற்கு கொண்டு செல்கிறது.

நாசா
இதில் நாசாவில் இருந்து சந்திரயான் 2 எல்ஆர்ஏ எனப்படும் (Laser Retroreflector Array (LRA)) கருவியை நிலவிற்கு கொண்டு செல்கிறது. நிலவில் நாசாவின் Laser Retroreflector Array (LRA) கருவி ஏற்கனவே சில இருக்கிறது. நாசாவின் அப்போலோ மூலம் ஏற்கனவே Laser Retroreflector Array (LRA) கருவிகள் சில நிலவில் பொருத்தப்பட்டுள்ளது.

என்ன செய்யும்
தற்போது சந்திரயான் 2 மூலம் மேலும் இரண்டு Laser Retroreflector Array (LRA) கருவிகள் நிலவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. Laser Retroreflector Array (LRA) என்பது லேசர் கண்ணாடி போன்ற கருவியாகும். இது நிலவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிலையாக வைக்கப்படும். அதன்பின் பூமியில் இருந்து அந்த கண்ணாடியை நோக்கி லேசர் கதிர்கள் அனுப்பப்படும்.

எப்படி முடியும்
அந்த லேசர் கதிர் செல்லும் தூரத்தை வைத்து நிலவின் ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் கண்டுபிடிக்கப்படும். இந்த நிலையில் தற்போது சந்திரயான் 2 நிலவின் தென் துருவத்திற்கு செல்கிறது. அந்த பகுதிக்கும் பூமிக்கும் இடையில் இருக்கும் தூரம் துல்லியமாக தெரியாது. இதை கண்டுபிடிக்கவே தற்போது நாசா சந்திரயான் 2 உடன் Laser Retroreflector Array (LRA) கருவியை அனுப்பி உள்ளது.

என்ன உதவி
பொதுவாக உலக நாடுகளுக்கு இடையில் விண்வெளி துறையில் போட்டி இருந்தாலும், ஒருநாட்டின் விண்வெளி ஆராய்ச்சியை இன்னொரு நாடு பயன்படுத்திக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒரு பகுதியாகவே நாசாவிற்கு தற்போது இஸ்ரோ உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications