சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் மத்திய அரசு பணிக்கு மாற்றம்!
டெல்லி: தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த சுதாகர் ஐபிஎஸ், மத்திய போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் துணை இயக்குனராக பதவி வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
நிர்வாக சீர்திருத்தங்கள் காரணமாக அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள் மாற்றப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகர் மத்திய பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசில், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்தவர் சுதாகர். தற்போது இவர் மத்திய போதைப்பொருள் தடுப்பு துணை இயக்குனர் ஜெனரலாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு வரும் வரை சுதாகர் துணை இயக்குனராக பதவி வகிப்பார் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக திண்டுக்கல் டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார். இவர் மத்திய இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக பதவி மாற்றம் செய்யப்பட்டிருந்தார். வந்திதா பாண்டேவுக்கும் திருச்சி டிஐஜி வருண் குமாரும் திருமணம் செய்து கொண்டனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவரான வந்திதா பாண்டே 2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்ச்சி பெற்று தமிழகத்தில் பணியாற்றி வந்தார்.
2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது, கரூரில் எஸ்பியாக பதவி வகித்த வந்திதா பாண்டே, கண்டெய்னரில் வந்த ரூ.570 கோடியை மடக்கி பிடித்த சம்பவத்தில் உறுதுணையாக இருந்தார். இதேபோன்று அதே தேர்தலில், முக்கிய அரசியல்வாதியின் பினாமி வீட்டில் பணப்பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடியை பறிமுதல் செய்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications