ஜாதி நஹி! சஞ்சு சாம்சனுக்கு டீமில் சான்ஸ் கிடைக்காதது ஏன் தெரியுமா? "ஸ்டிங்கில்" சொன்ன சேத்தன் சர்மா

சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படாததை கண்டித்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஜாதி வெறி பிசிசிஐ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறித்தும் சேத்தன் சர்மா பேசி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பல்வேறு ரகசியங்கள் குறித்து பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா பேசியது தனியார் தொலைக்காட்சியின் ஸ்டிங் ஆபரேசனில் சிக்கியுள்ள நிலையில், சஞ்சு சாம்சன் அணியில் தேர்வு செய்யப்படாததை கண்டித்து அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஜாதி வெறி பிசிசிஐ என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டது குறித்தும் பேசி உள்ளார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில் அந்த அணியின் வீரர்கள் தேர்வு குறித்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இதனை தொடர்ந்து பிசிசிஐ சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழுவையே மொத்தமாக கலைப்பதாக அறிவித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே சேத்தன் சர்மா மீண்டும் தேர்வுக்குழுவின் தலைவரானார்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்


உலகக்கோப்பை தொடர் முடிந்தவுடன் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார்.

அணியில் நீக்கம்

அணியில் நீக்கம்

அந்த தொடரின் முதல் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 36 ரன்களை சஞ்சு சாம்சன் எடுத்த நிலையில் பந்துவீச்சாளர்களின் சொதப்பல், ரிஷப் பண்டின் ஃபார்ம் அவுட் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்தது. ஆனால், தீபக் ஹூடாவையும், தீபக் சஹாரையும் அணியில் சேர்த்துவிட்டு சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

ஜாதிவெறி பிசிசிஐ

ஜாதிவெறி பிசிசிஐ

எனவே சஞ்சு சாம்சனை நீக்கியதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது என ட்விட்டரில் பலர் குற்றம்சாட்டி #justiceforsanjusamson என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தார்கள். சாதி அடிப்படையில் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதாக கூறி கடந்த வியாழக்கிழமை #CasteistBCCI என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.

 ஸ்டிங்கில் சிக்கிய சேத்தன் சர்மா

ஸ்டிங்கில் சிக்கிய சேத்தன் சர்மா

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகும் உரிய வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் சஞ்சு சாம்சன். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி பிசிசிஐ தேர்வுக்குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவிடம் ஸ்டிங் ஆபரேசன் மேற்கொண்டதில் அவர் சஞ்சு சாம்சன் குறித்தும் தெரிவித்து இருக்கிறார்.

சாம்சனின் ரசிகர்கள்

சாம்சனின் ரசிகர்கள்

அவர் பேசுகையில், "இந்திய அணியில் நீங்கள் சஞ்சு சாம்சனை சேர்க்காவிட்டால் ட்விட்டரில் நமக்கு எதிராக அவரது ரசிகர்கள் பேசுவார்கள். இஷான் கிஷன் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய வீரர்களின் சிறப்பான ஆட்டங்களால் சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல் ஷிகர் தவான் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளது." என்றார்.

கடந்த ஆண்டு பேட்டி

கடந்த ஆண்டு பேட்டி

ஆனால், கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பில் பேசிய சேட்டன் சர்மா, "சஞ்சு சாம்சன் எங்கள் திட்டத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளில் இந்தியாவுக்கு பயனுள்ள வீரர் யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக சாம்சன் விளையாடுவார்." என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+