ராமர் படம் போட்ட பேப்பர் பிளேட்டில் சிக்கன் பிரியாணி.. கொந்தளித்த இந்து அமைப்பினர்.. டெல்லியில் பரபர
டெல்லி: தலைநகர் டெல்லியில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமர் படம் இடம்பெற்றிருந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியது. இதனால், சில இந்து அமைப்புகள் அந்த பிரியாணி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் மக்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக பிரியாணி உள்ளது. பெரு நகரங்கள் முதல் சிறிய நரங்கள் வரை பிரியாணி கடைகள் இல்லாத பகுதிகளே பார்க்க முடியாது. மதிய வேளைகளில் பிரியாணி கடைகளில் விற்பனை களை கட்டும்.. தலைநகர் டெல்லியும் இதற்கு விதி விலக்கு இல்லை.

முக்கிய பகுதிகளில் பிரியாணி கடைகள் ஆங்காங்கே போடப்பட்டு படு ஜோராக விற்பனை நடைபெற்று வரும். அந்த வகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் உள்ள பிரியாணி கடைகளில் பிரியானி விற்பனை நடைபெற்று வந்தது. அப்போது அங்குள்ள பிரியாணி கடை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமரின் படம் இருந்துள்ளது.
சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட பேப்பர் பிளேட்டில் கடவுள் ராமர் படம் இடம்பெற்றிருந்த தகவல் அங்கு காட்டுத்தீ போல பரவியது. இதனால், சில இந்து அமைப்புகள் அந்த பிரியாணி கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விரைந்து வந்த போலீசார், கடை உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:- கடை உரிமையாளர் மொத்த வியாபாரி ஒருவரிடம் இருந்து பேப்பர் பிளேட்களை மொத்தமாக வாங்கியுள்ளார். இதில் சில பேப்பர் பிளேட்களில் கடவுள் ராமரின் படம் இருந்துள்ளது. ராமாயண கதை தொடர்பான புத்தகத்தில் இருந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரை பயன்படுத்தி பேப்பர் பிளேட் தயாரிக்கப்பட்டதால், சில பிளேட்களில் ராமர் படங்கள் எதேச்சையாக இடம்பெற்றிருக்கின்றன.
கடை ஊழியர்களிடம் உணவு கொடுக்கும் போது ராமர் படம் இருந்ததை கவனிக்காமல் வாடிக்கையாளர்களுக்கு சிக்கன் பிரியாணியை வைத்து கொடுத்து இருக்கிறார்கள்" என்றனர். கடை உரிமையாளரை 107/151 பிரிவின் கீழ் தடுப்புக்காவலில் வைத்த போலீசார் அதே நாளில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications