திமுகவிற்கு விஜய் போட்டியா.. களத்தில் யாருமே கிடையாது.. கனிமொழி கொடுத்த பதில்!
டெல்லி: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையில் மட்டுமே போட்டி என்று விஜய் கூறியதற்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். அதில், எல்லோரும் திமுகவைதான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு யாரும் போட்டி இல்லை என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போட்டியாக வேறு யாரும் களத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தவெக பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசுகையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் இதுவரை தமிழ்நாடு சந்திக்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும்.. இந்த தேர்தல் 2 பேருக்கு இடையிலான போட்டி மட்டும்தான்.. அது தவெக.. மற்றொன்று திமுக என்று தெரிவித்தார். ஆளுங்கட்சியாக திமுகவுக்கு எதிராக 2வது இடத்தில் தவெக இருப்பதாக விஜய் பேசி இருக்கிறார்.

அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை விடுத்து, ஒருமுறை கூட தேர்தலை சந்திக்காத தவெகவை முன் வைத்தது அரசியலில் விவாதமாகி இருக்கிறது. இதற்கு அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பதில் அளித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தொண்டர்களை உற்சாகப்படுத்த அனைவரும் இப்படிதான் பேசுவார்கள். விஜயும் அப்படி பேசி இருக்கிறார் என்றார்.
தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், எல்லோரும் திமுகவைதான் போட்டியாக நினைக்கிறார்கள். ஆனால் திமுகவிற்கு யாரும் போட்டி இல்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வேறு எந்த தலைவரும் களத்தில் இல்லை என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது என்று தெரித்துள்ளார். அதேபோல் திமுக எம்பி டிஆர் பாலு, முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் பேச்சிற்கு தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் பதில் அளித்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்தியா டுடே சி-வோட்டரில் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வருக்கான பந்தயம் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில் முதலிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.
27 சதவிகித மக்களின் விரும்பத்தக்க நபராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து 18 சதவிகிதம் விரும்பத்தக்க நபராக தவெக தலைவர் விஜய் இருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 சதவிகித ஆதரவும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு 9 சதவிகித ஆதரவும் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
விஜய்க்கு விஷால் கொடுத்த வித்தியாசமான பரிசு.. கையில் கவனிச்சீங்களா? இது பலருக்கு பாடம் -
தமிழ்நாட்டின் கஜானா காலியா? நிதி நிலை என்ன? இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
சென்னையில் பில்டிங் கட்டுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. முதல்வர் விஜய் உத்தரவு -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
உதயநிதி வட்டத்தை காலி செய்யும் விஜய்.. ரெடியான மெகா பிளான்.. முதல் தூண்டிலே திமிங்கலத்திற்கு! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு!












Click it and Unblock the Notifications