பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்.. பேசப்போவது என்ன?
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். பிரதமர் மோடியை மு.க ஸ்டாலின் சந்தித்து பேச இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இதன் பின்னர் டெல்லி விமான நிலையத்தில் மாலை 6 மணியளவில் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். நேற்று பிற்பகல் அளவில் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு டி.ஆர் பாலு, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தமிழ்நாடு இல்லம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் சூழல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல், இந்தியா கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாட்டு சுற்றுலா பயணி பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், டெல்லியில் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.
நிதி ஆயோக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். இதில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதி குறித்து கேட்கப்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து மாலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் முன்பு ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் பரபரப்புக்கு இடையே பிரதமர் மோடியை - ஸ்டாலின் சந்தித்து பேச வாய்புள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தனது டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு 7.30 மணியளவில் தமிழ்நாடு திரும்புகிறார்.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன? -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications