ஆஹா ஆசிரியர்கள்.. அடடா தேவதைகள்.. மறக்க முடியாத குழந்தைகள் தினம்!
டெல்லி: குழந்தைகள் தினத்தை யாரால்தான் மறக்க முடியும். குழந்தைகள் தினம் என்றதும் நேரு தலைப்பில் கட்டுரை எழுதி பரிசு வாங்கியது நினைவுக்கு வரலாம்.
நேரு என்ற தலைப்பில் ஒரு பக்கம் படித்து எப்படியோ மனப்பாடம் பண்ணி பேசி கூட்டத்தில் கை தட்டு வாங்கியது நினைவுக்கு வரலாம். இந்த போட்டி பரிசு அதை எல்லாம் விட அழகான ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.
எங்கள் பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து எங்க எல்லோருக்குமான அழகான ஒரு பரிசு தருவார்கள். அது என்ன என்றால்...

எல்லாமே ஆசிரியர்கள் தான்
அந்தக் குழந்தைகள் தின விழா அன்று முழுவதும் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடையில் ஒரு மாணவர்களை கூட காண முடியாது. அன்று எல்லாமே ஆசிரியர்கள் தான். விழா முன்னுரை, வரவேற்பு என்று வரிசையாக எல்லாமே ஆசிரியர்கள் தான். நாம ஜாலியாக ரசித்து கை தட்டுறது தான் நம்ம பங்கு.

ஆஹா ஆசிரியர்கள்
எப்போதும் வகுப்பறையில் கர்ஜிக்கும் ஆசிரியர்களின் "சங்கீதத்தை"க் கூட அன்று மைக்கில் இனிமையாக கேட்க முடியும். ஆசிரியர்கள் பாடல் மட்டுமா பாடுவார்கள். அழகு அழகாக குழு நடனம் கூட ஆடுவார்கள். அதுவும் எங்க கால கட்டத்தில் உள்ள இனிமையான பாடல்களுக்கு. நம் தேவதைகள் ஆடுவதை ஆச்சரியத்தோடு கண்கள் விரித்து பார்த்திருப்போம்.

ஆட்டம், பாட்டம்
பாடல், ஆடல் என்று முடித்து விடாமல் ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து நடிக்கும் நாடகங்கள் கூட உண்டு. அதைக் காணும் போது தான் எத்தனை இனிமை. ஏ அது எங்க டீச்சர் எங்க டீச்சர் என்று உற்சாகமாக சத்தம் எழுப்பி, ஆண் வேடமணிந்து இருக்கும் டீச்சரை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து என எவ்வளவு சுகமான அனுபவங்கள்.

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
இன்றைய குழந்தை தினத்தில் குழந்தையாய் இல்லாத பொழுது கூட அந்த கால பொழுதுகளின் சுவையை அசைபோட்டு சிலாகிப்பது சுகமே. பள்ளிச் சீருடை அணிந்து இரட்டை சடை கட்டி புளிப்பு நெல்லிக்காயை காக்கை கடி கடித்து நண்பன் தோளோடு கைபோட்டு கதைகள் பேசி நடந்து போன நினைவுகளோடு எல்லோருக்கும் குழந்தைகள் தின வாழ்த்துக்கள்.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
நாளை முதல் முறையாக டெல்லி செல்லும் முதல்வர் விஜய்! பயண திட்டம் என்ன? யாரையெல்லாம் சந்திக்கிறார்? -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications