போர் முடிந்த உடன் வேலையை காட்டிய டிராகன்! பாகிஸ்தானுக்கு உள்ளே.. வேகம் எடுத்த சீனாவின் ப்ராஜெக்ட்
டெல்லி: பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானில் சீனா அணை கட்டும் வேலைகளை துரிதப்படுத்தி உள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான சீனா எரிசக்தி பொறியியல் கழகம் 2019 முதல் வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் முகமந்த் நீர்மின் திட்டத்தை கட்டி வருகிறது. அடுத்த ஆண்டு முடிக்க திட்டமிடப்பட்டிருந்த இந்த திட்டத்தை இந்த ஆண்டே அவசரமாக முடிக்க சீனா முடிவு செய்துள்ளது.
அணையில் கான்கிரீட் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளதால், கட்டுமான பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்திய நிலையில் சீனா இந்த வேலைகளை வேகப்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் உடன் 1960 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது.
மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் இந்த செனாப் நதி பாய்கிறது. இது 3 வாரங்களாக தண்ணீர் இல்லாமல் வறண்டு ஓடுகிறது.

வற்றிய நதிகள்
1960 ஆம் ஆண்டின் சிந்து நதி நீர் ஒப்பந்தம் உடனடியாக கைவிடப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. சிந்து நதி மற்றும் அதன் துணை நதிகளில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும் இது. உலக வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் அமைந்துள்ள பியாஸ், ரவி மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று கிழக்கு நதிகளின் நீரின் மீதான கட்டுப்பாட்டை இந்தியாவிற்கு வழங்கியது. அதே சமயம் மூன்று மேற்கு நதிகளான சிந்து, செனாப் மற்றும் ஜீலம் ஆகியவற்றின் நீர் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தானுக்கு வழங்கியது. இந்தியாவில் அமைந்துள்ள சிந்து நதியின் மொத்த நீரில் இதன் மூலம் சுமார் 30% இந்தியாவுக்கு கிடைத்தது, மீதமுள்ள 70% பாகிஸ்தானுக்கு கிடைத்தது. இதைத்தான் இந்தியா தடுத்துள்ளது. இந்த நதிகளின் நீர் இனி பாகிஸ்தானுக்கு கிடைப்பது கடினம்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கைவிட்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள செனாப் வற்றி உள்ளது. மூன்று மேற்கு நதிகளான சிந்து, ஜீலம், மற்றும் செனாப் நதிகளில்.. செனாப் முற்றிலுமாக வற்றி உள்ளது.
அணை கட்டும் பணிகள்
பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்குவதை இந்தியா நிறுத்திய நிலையில், பாகிஸ்தானில் சீனா அணை கட்டும் வேலைகளை துரிதப்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், சீனாவின் உயர்மட்ட தூதர் வாங் யியைச் சந்திக்க நேற்று பெய்ஜிங்கிற்குச் சென்ற நிலையில் இந்த பணிகள் துரிதம் அடைந்துள்ளன.
இந்த அணையை பாதுகாக்க சீன வீரர்கள் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பாகிஸ்தான் நாட்டிற்கு உள்ளே சீனா கொத்து கொத்தாக படைவீரர்களை களமிறக்க தொடங்கி உள்ளது. நேரடியாக சீன ராணுவ வீரர்களை களமிறக்காமல், சீனாவின் தனியார் படைவீரர்களை களமிறக்கி வருகிறது.
பொதுவாக தனியார் படைவீரர்களை Mercenaries என்று அழைப்பார்கள். முன்னாள் படைவீரர்களை சிலர் வேலைக்கு அழைத்து இது போல தனியார் படை குழுக்களை உருவாக்குவார்கள். போர்கள், தாக்குதல்கள் நடக்கும் போது இது போன்ற படைகள் முக்கியமானது. அரசு நேரடியாக தலையிட முடியாத சில விவகாரங்களில் அரசு சார்பாக இது போல Mercenaries களமிறக்கப்படுவார்கள். அமெரிக்காவிடம் இது போல Mercenaries அதிகம் உள்ளனர். இஸ்ரேல், சீனா, ரஷ்யாவிடம் Mercenaries அதிகம் உள்ளனர்.
முக்கியமாக பாகிஸ்தானிடம் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள Mercenaries அதிகம் உள்ளனர். இப்படிப்பட்ட Mercenariesகளைத்தான் சீனா இப்போது பாகிஸ்தான் எல்லையில் களமிறக்கி உள்ளது. இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் பாகிஸ்தானின் சிந்து பகுதியில் சீனா களமிறக்கி உள்ளது. கிட்டத்தட்ட 15 ஆயிரம் Mercenariesகளை சீனா களமிறக்கி உள்ளதாம். இந்தியாவின் உளவு பிரிவுகளுக்கு இது தொடர்பாக தகவல்கள் வந்துள்ளதாம். சீனாவின் பல்வேறு கட்டுமான திட்டங்களுக்காக பாகிஸ்தானில் 30 லட்சம் பேர் வரை உள்ளனர். அவர்களை பாதுகாப்பது இவர்களின் முதல் நோக்கம்.












Click it and Unblock the Notifications