ஆரம்பம் நல்லாதான் இருந்தது.. ஆனாலும் அடி வாங்கும் பஜாஜ், டிவிஎஸ்! எல்லாம் சீனா செய்த வேலைதான்!
டெல்லி: ஆட்டோமொபைல் துறைக்கு உயிர் நாடியாக இருக்கும் அரிய பூமி காந்தங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்தியாவில் ஏத்தர், பஜாஜ், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் மின்சார பைக் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தி பாதியாக குறைக்கும் நிலைக்கு இந்நிறுவனங்கள் தள்ளப்பட்டிருக்கின்றன.
பஜாஜ் தனது உற்பத்தியை பாதியாக குறைக்க உள்ளது, ஏத்தர் 8 முதல் 10 சதவீதம் வரை உற்பத்தியை குறைக்க திட்டமிட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் வாகனங்கள் வழக்கம்போல உற்பத்தியை மெயின்டெயின் செய்யும் என்று எகனாமிக் டைம்ஸில் தெரிவித்திருக்கிறது. ஓலா நிறுவனத்திடம் போதுமான அளவுக்கு காந்தங்கள் இருப்பதால் அதன் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கடந்த இரண்டு மாதங்களில் பஜாஜ், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்கள் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தன. இந்த நிலைமையில்தானா இப்படி நடக்க வேண்டும்? என்று இந்நிறுவனங்கள் புலம்பி வருகின்றன. பெட்ரோல் பைக் உற்பத்தியில் இந்த இரண்டு நிறுவனங்களும் கடந்த காலங்களில் சக்கை போடு போட்டு வந்தன. குறிப்பாக பஜாஜ் நிறுவனத்தின் 'பல்சர்' பைக்குகள் இல்லாத இந்திய நகரங்களே இல்லை என்று சொல்லலாம். தெருவுக்கு நாலு பல்சர் பைக்குகள் நின்றுக்கொண்டிருக்கிறது.
கால் டாக்சி போல எங்கு பார்த்தாலும் ஒரு காலத்தில் பல்சர் பைக்குகள் அதிகம் ஓடிக்கொண்டிருந்தன. இப்போதும் இந்த பைக்குகளின் விற்பனை டாப்பில்தான் இருக்கிறது. மைலேஜ் பைக்குகள் எனில் பிலாடினா, சிடி 100 பைக்குகளை சொல்லலாம். ஹீரோ ஹோண்டாவின் ஸ்பெலண்டர் பைக்குகளுக்கு மாற்றாக இவை இருந்தன. இன்றும் இந்த பைக்குகளுக்கு தனி இடம் இருக்கிறது.
அதேபோல, டிவிஎஸ் நிறுவனம் அதன் 'அப்பாச்சி' பைக்குகளுக்காக பேமஸாக அறியப்படுகிறது. அப்பாச்சி தெரியாதவர்களுக்கு டிவிஎஸ் 50 சொன்னால் தெரியும். இந்த நிறுவனங்கள் இப்போதுதான் மின்சார ஸ்கூட்டர்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கியுள்ளன. இந்த நேரம் பார்த்து சீனாவின் நடவடிக்கையால், கடுமையான பின்னடைவை சந்தித்திருக்கின்றன.
சீனாவின் காந்த ஏற்றுமதி தடையால் 'சேதக்' பைக்கின் உற்பத்தியை குறையத் தொடங்கியுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மா இது குறித்து கூறுகையில், "சேதக் லைனில் சில உற்பத்தி இடையூறுகளை நாங்கள் பார்க்கத் தொடங்கியுள்ளோம். எங்கள் ஆர் & டி மற்றும் கொள்முதல் குழுக்கள் இதை சரி செய்ய பணியாற்றி வருகின்றன" என்று தெரிவித்திருக்கிறார்.
டிவிஎஸ் மோட்டார் கடந்த மூன்று மாதங்களில் நல்ல விற்பனையை கொண்டிருந்தது. ஐகியூப் இந்தியாவில் நம்பர் ஒன் இருசக்கர வாகனமாக இருந்து வருகிறது. ஜூன் மாதத்தில், டிவிஎஸ் 25,274 யூனிட்களை விற்றது. இது கடந்த ஆண்டை விட 80% அதிகமாகும். 2024ல் 14,029 யூனிட்களை மட்டுமே இது விற்றிருந்தது.
தற்போது, டிவிஎஸ் 24% சந்தை பங்கைக் கொண்டுள்ளது. அரிய காந்த பற்றாக்குறை அவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை. ஆனால் டிவிஎஸ் மோட்டார் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "EV சப்ளை சங்கிலியில் ஏற்படும் இடையூறுகள், குறிப்பாக காந்தம் கிடைப்பது தொடர்பானவை, குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் சவால்களைத் தொடர்ந்து ஏற்படுத்துகின்றன. சவால்களைக் குறைக்க நாங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
ஏத்தரின் விற்பனை நிலையானதாக இருக்கிறது. பெரிய அளவுக்கு சரிவோ, அதிகாரிப்போ இல்லை. ஆனால் அரிய காந்தங்கள் சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை எனில், உற்பத்தியில் சரிவு ஏற்பட்டு, அது விற்பனையிலும் பிரதிபலிக்கும். இதனால் பைக்குகளின் விலை விண்ணை தொடலாம் என்று அஞ்சப்படுகிறது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications