பதற்றத்திற்கு மத்தியில்.. எல்லையில் வேலையை காட்டிய சீனா.. பென்டகன் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தனது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது என்று கூறப்படும் நிலையில், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆசிய கண்டத்திலேயே யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்பது சீனாவின் கனவு. சீனாவின் இந்த கனவுக்கு பெரும் சவால் விடுக்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. ஆசியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது. இதனால், இந்தியா மீது எரிச்சல் அடையும் சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை அவ்வப்போது கையாண்டு வருகிறது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவை பூகோள ரீதியில் நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. இதற்காக இலங்கை, மாலத்தீவு உள்பட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு கடனை அள்ளி கொடுத்து வளைக்க முயன்று வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் அந்த நாடுகளில் எல்லாம் சீனா தனது பல பில்லியன் மதிப்பில் தனது முதலீட்டை குவித்து வருகிறது.
இது ஒருபக்கம் என்றால் எல்லையிலும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலாமான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது இந்திய எல்லைக்குள்ளும் அத்துமீறி அடாவடி செய்கிறது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடியை கொடுக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நள்ளிரவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டையில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், தொடர்ந்து எல்லையில் பதற்ற நிலை காணப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால் இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தனது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவுடன் பதற்றமான சூழல் நிலவிய கால கட்டத்தில், எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா தனது உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது, சுரங்க சேமிப்பு கிடங்கு வசதிகள், புதிய சாலைகள், பயணிகளும் போருக்காகவும் பயன்படுத்தப்படுக்கூடிய வசதிகள் கொண்ட விமான நிலையங்கள், பல ஹெலிபேடுகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருவதோடு ராணுவ வீரர்களையும் குவித்து வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் செயலுக்கு பதிலடியாக இந்தியாவும் எல்லைப்பகுதிகளின் நவீன வசதிகளுடன் சாலை உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அசல் எல்லை கோட்டு பகுதியில் 3,488 கி.மீ. தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா வீழ்த்தி விடும் என்று ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications