எதைப் பற்றியும் சட்டை செய்யாத சீனா.. லடாக் எல்லையில் ஃபைபர் கேபிள் அமைக்கிறது.. வெளியான திடுக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உண்மையான கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நிலவும் பதட்டம் மற்றும் இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் என்றால், சீன ராணுவம் அதிவேக தகவல்தொடர்புக்காக லடாக் ஃபிளாஷ் பாயிண்டில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை பதித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஃபைபர் கேபிள்கள் லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கே காணப்பட்டதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது. சீனப் படையினருக்கு பாதுகாப்பான தகவல்தொடர்புகளை வழங்க இது உதவும் எனக் கூறப்படுகிறது.

பாங்கோங் த்சோ ஏரியின் தெற்கே 70 கி.மீ நீளமுள்ள முன்புறத்தில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் தொடர்ந்து பல மாதங்களாக முகாமிட்டுள்ளனர்.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

ராணுவ மற்றும் ராஜதந்திர மட்டங்களில் இரு தரப்பினரும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர், ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக, இதேபோன்ற தகவல்தொடர்பு கேபிள்கள் ஒரு மாதத்திற்கு முன்பு பாங்கோங் த்சோ ஏரியின் வடக்கே காணப்பட்டன. இப்போது தெற்கு பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்டிக்கல் ஃபைபர்

ஆப்டிக்கல் ஃபைபர்

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் தகவல்தொடர்பு பாதுகாப்பை உறுதி செய்கின்றன. படங்கள் மற்றும் ஆவணங்கள் போன்ற தரவுகளை வேகமாக அனுப்பும் திறனையும் வழங்குகின்றன என்று முன்னாள் இந்திய ராணுவ உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

இடைமறிக்க முடியாது

இடைமறிக்க முடியாது

"ரேடியோவில் பேசினால், அது இடைமறித்து ஒட்டு கேட்கப்பட வாய்ப்பு உள்ளது. ஆப்டிகல் ஃபைபர் கேபிள்கள் வாயிலாக தொடர்பு கொள்ளும்போது பாதுகாப்பு உள்ளது," என்று அவர் மேலும் கூறினார். இந்திய இராணுவம் ரேடியோ தகவல்தொடர்புகளை சார்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இடைமறிக்க முடியாத (encrypted) தொழில்நுட்பம் அதில் பயன்படுத்தப்படுகிறது.

சீனா மறுப்பு

சீனா மறுப்பு

இதனிடையே, லடாக் ஃபிளாஷ் பாயிண்டில் சீனா ஃபைபர் ஆப்டிக் கேபிள்களின் நெட்வொர்க் அமைத்து வருவதாக வெளியான செய்திகளை சீன வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. சீனாவும் இந்தியாவும் ராஜதந்திர மற்றும் ராணுவ ரீதியாக தகவல் தொடர்புகளை மேற்கொண்டு பிரச்சினைகளை தீர்க்க முயலுவதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+