அந்த இடத்தை மீட்போம்.. இந்தியாவை திடீரென எதிர்க்கும் நேபாளம்..பின்னாலிருந்து இயக்கும் சீனா.. பின்னணி

நேபாளம் எல்லை அருகே லிபு லேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்ததற்கு நேபாள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாளம் எல்லை அருகே லிபு லேக் பகுதியில் இந்தியா சாலை அமைத்ததற்கு நேபாள அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு பின் சீனாவின் திட்டங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Recommended Video

    Nepal-india border issue| சீனா கொடுத்த ஐடியா... இந்தியாவை எதிர்க்கும் நேபாளம்

    இந்தியா - சீனா- நேபாளம் ஆகிய மூன்று நாடுகள் சந்திக்கும் எல்லைதான் லிபு லேக் பகுதி. இந்த பகுதியில் பெரும்பாலான இடங்கள் தற்போது இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. இங்குதான் கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.

    அதாவது உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாளம் எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கைலாஷ் மானசரோவர் செல்லும் மக்களுக்காக இந்த சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை தற்போது பிரச்சனை ஆகிறது

    இந்த சாலை தற்போது பிரச்சனை ஆகிறது

    இந்த சாலைதான் தற்போது இந்தியா மற்றும் நேபாளம் இடையே பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது. இது எங்களுக்கு சொந்தமான இடம். இந்தியா இதை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த இடத்தை மீண்டும் மீட்டு எடுப்போம் என்று கூறி வருகிறது. இந்த நிலையில் அங்கு போடப்பட்டுள்ள சாலை காரணமாக தற்போது அங்கு பதற்றம் அதிகரித்து உள்ளது.

    எச்சரிக்கை விடுத்தார்

    எச்சரிக்கை விடுத்தார்

    இந்த நிலையில்தான் இது தொடர்பாக நேபாள அதிபர் பித்யா தேவி பந்தாரி இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்தார். அதில், லிபு லேக், லம்பியாதூரா, கலபாணி ஆகிய பகுதிகள் நேபாளுக்கு சொந்தமானது. இங்கு இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்த இடங்களை மீட்போம். இந்தியா அங்கு சாலை அமைத்ததை ஏற்க முடியாது. இந்த இடங்கள் நேபாளுக்கு கீழ் வர கூடியது. இதற்கான புதிய நேபாளம் வரைபடத்தை நாங்கள் வெளியிடுவோம், என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார் .

    அச்சம்

    அச்சம்

    அவரின் இந்த எச்சரிக்கை இரண்டு நாடுகளுக்கு இடையே பெரிய பதற்றம் உண்டாக்கி உள்ளது. நேபாளம் உடன் நட்பாக இருப்பது இந்தியாவிற்கு மிகவும் அவசியம் ஆகும். நேபாளம் சீனாவுடன் நெருக்கம் ஆனால் அது இந்தியாவிற்கு பெரிய பிரச்சனை ஆகும். இதனால் நேபாளுடன் நட்பாக செல்லவே இந்தியா முயன்று வருகிறது. இந்த எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து வருகிறது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இது தொடர்பாக இந்தியா விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவ ஜெனரல் எம்எம் நாரவனே அளித்த பேட்டியில், நேபாளம் நாட்டுடனான இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று கூறியுள்ளோம். கிழக்கு காளி ஆறு அவர்களுக்கு சொந்தம் என்று நேபாள அரசு கூறுகிறது. நாங்கள் அங்கு சாலையை அமைக்கவில்லை. நாங்கள் மேற்கு காளி ஆற்றில்தான் சாலையை அமைக்கிறோம். அங்கு பிரச்சனை எதுவும் இல்லை.

    பிரச்சனை இல்லை

    பிரச்சனை இல்லை

    இத்தனை வருடம் அந்த பகுதியில் பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் திடீர் என்று அங்கு பிரச்சனையை உண்டாக்க நேபாளம் முயல்கிறது. இதற்கு காரணம் இருக்கலாம். நேபாளை பின்னிருந்து யாராவது இயக்கலாம். நேபாள அரசுக்கு பின் மூன்றாவதாக ஒரு கை இருக்கிறது. இந்த பிரச்னையை விரைவில் சரி செய்வோம். விரைவில் இது தொடர்பாக முக்கியமான நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளார்.

    சீனா ஆதிக்கம்

    சீனா ஆதிக்கம்

    நேபாளின் இந்த திடீர் கோபத்திற்கு காரணம் சீனாதான் என்று கூறுகிறார்கள். நேபாளை பின்னால் இருந்து ஒரு யாரோ இயக்குகிறார்கள் என்று இந்திய ராணுவ ஜெனரல் எம்எம் நாரவனே கூறியது சீனாவைத்தான் என்று கூறுகிறார்கள். நேபாளம் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் இந்தியாவை கட்டுப்படுத்த முடியும் என்று சீனா நினைக்கிறது. அதோடு நேபாளை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. இந்தியாவை இதன் மூலம் வீழ்த்த சீனா நினைக்கிறது.

    மோதும் சீனா

    மோதும் சீனா

    இந்தியாவுடன் ஏற்கனவே டோக்லாம் தொடங்கி சிக்கிம் எல்லையில் பல இடங்களில் சீனா மோதி வருகிறது. அதேபோல் லடாக்கில் சீனாவின் ஹெலிகாப்டர்கள் அத்துமீறி உள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இப்படி நேபாளம் மூலம் பிரச்சனை உருவாகி உள்ளது. தெற்காசிய அரசியலில் இது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+