'இ- விட்டாரா' கார் உற்பத்தியை குறைத்தது மாருதி.. சீனாவால் சிக்கலில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
டெல்லி: கார், பைக் உற்பத்தியை மேற்கொள்ளும் ஆட்டோமொபைல் துறைக்கு, பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் 'அரிய மண் காந்தங்கள்' மிகவும் முக்கியம். ஆனால், இதன் உற்பத்தியை 90% வரை சீனாதான் கையில் வைத்திருக்கிறது. தற்போது அந்நாடு இந்த காந்த ஏற்றுமதியை நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக மாருதி நிறுவனம் தனது 'இ-விட்டாரா' கார் தயாரிப்பை குறைத்திருக்கிறது.
சீனாவின் ஆதிக்கம்
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில், மின்சார வாகனங்களுக்கு மவுசு லேட்டாகத்தான் சூடுபிடிக்கும். இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஆண்டுதான். மின்சார வாகனங்களுக்கு நிறைய கிராக்கி வர தொடங்கியது. ஆனால், சீனா சொதப்பியதால், இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திணறி வருகின்றன. மின்சார வாகனங்களில் உள்ள மோட்டார்களில் இந்த அரிய காந்தங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமெரிக்கா உடனான வர்த்தக மோதல்களால் உஷரான சீனா, கடந்த ஏப்ரல் மாதமே இந்த காந்தங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்திக்கொண்டது.

உற்பத்தியை குறைத்த மாருதி
இதற்கு முன்னர் வரை, இந்தியாவின் மிகப்பெரிய மின்சார வாகன உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகியவை சீனாவின் பிஒய்டி கோ மற்றும் கோஷன் ஆகியவற்றிலிருந்து வரும் பேட்டரிகளையே நம்பியிருந்தன. ஆனால் ஏற்றுமதி நிறுத்தத்தால், இந்நிறுவனங்கள் கம்பிநீட்டிவிட்டன. இதனால், மாருதி தனது முதல் மின்சார வாகனமான 'இ-விட்டாரா'வின் தயாரிப்பு எண்ணிக்கையை குறைத்திருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 26,500 யூனிட்கள் உற்பத்தி செய்ய முதலில் மாருதி திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது இது வெறும் 8,200 யூனிட்களாக கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு குறைந்திருக்கிறது.
பைக் தயாரிப்பிலும் பிரச்சனை
கார் மட்டுமல்லாது, பைக் தாயரிப்பு நிறுவனங்களும் அடி வாங்கியுள்ளன. பஜாஜ் நிறுவனம் தற்போது மின்சார வாகனங்களை அதிக அளவில் தயாரித்து வருகிறது. ஆனால், சீனாவின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் ஜூலை மாதத்தில் மின்சார பைக் உற்பத்தியை ஒரேயடியாக குறைக்க முடிவெடுத்திருக்கிறது.
சீனாவின் நடவடிக்கைக்கு காரணம்
சீனா ஏன் இவ்வளவு முரண்டு பிடிக்கிறது என்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா-சீனா இடையே எல்லை பிரச்சனை சலசலப்புகளை ஏற்படுத்தியது. இதனால் இந்திய அரசு தனது கொள்கையில் மிக முக்கியமான மாற்றங்களை செய்தது. அதன்படி, இந்தியாவுடன் எல்லை பிரச்சனையில் ஈடுபடும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
எனவே சீனாவின் ஆட்டோமொபைல் நிறுவனமான, பிஒய்டி கோ மற்றும் கிரேட் வால் மோட்டார் ஆகிய இரு நிறுவனங்கள் இந்தியாவில் கார் உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க முடியாமல் போயின.
மட்டுமல்லாது கடந்த 2020ல் 'டிக்டாக்' போன்ற சீன செயலிகள் அதிரடியாக தடை செய்யப்பட்டன. மேலும், கொரோனா தொற்றுநோய் காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியா மற்றும் சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. நாம் இவ்வளவு செய்திருப்பதால், பதிலுக்கு சீனாவும் நம்மை செய்ய தொடங்கியுள்ளது.
இந்தியாவுக்கு மாற்று வழி இருக்கிறதா?
இப்படி பழிவாங்கும் சீனாவை மொத்தமாக தவிர்க்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும், அரிய காந்தங்கள் விஷயத்தில் சீனாவை தவிர்க்க முடியாது. இத்தனைக்கும் இந்தியாவில் 6.9 மில்லியடன் மெட்ரிக் டன் கனிம வளம் இருக்கிறது. உலக அளவில் அதிக கனிம வளங்களை கொண்டிருக்கும் நாடுகளின் லிஸ்ட்டில் இந்தியா 5வது இடத்தில் இருக்கிறது. இருப்பினும் நாம் நினைத்தால், உடனடியாக இந்த கணிமங்களை பிரித்தெடுக்க முடியாது.
இந்தியாவுக்கான சிக்கல்
ஏனெனில் இதற்கான தொழில்நுட்பம் இந்தியாவில் எங்குமே இல்லை. முதலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பின்னர் பிரித்தெடுக்க வேண்டும், அப்புறம்தான் ஏற்றுமதி. இதெல்லாம் செய்ய நமக்கு பல ஆண்டுகள் ஆகும். எனவே நமக்கு வேறு வழியே கிடையாது.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மொத்த பயணிகள் கார் விற்பனையில் மின்சார வாகனங்கள் 30% ஆக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். தற்போது இது 2.5% ஆக உள்ளது. மின்சார கார் விற்பனை மூலம் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதுடன் இந்தியாவின் நகரங்களில் உள்ள காற்று மாசுபாட்டை குறைக்க முடியும். எல்லாம் ஓகேதான் ஆனால் இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்துக்கொண்டு, எப்படி இலக்கை அடைவது?
மோடி தனது இலக்குகளை அடைய வேண்டுமானால், இப்போதே வேலையை தொடங்க வேண்டும். தொடங்கினாலும் குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications