டைம் பாம்.. சீனாவால் இந்தியாவுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! நேபாளம் மாதிரி நடக்கப்போகுது!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் பெரு வெள்ளம் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி கொண்டிருக்கிறது. இப்படி இருக்கையில், சீனாவால் இந்தியா பெரிய பாதிப்பை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேச எல்லைக்கு மிக அருகில், திபெத்தின் மேடாக் பகுதியில் சீனா 60,000 மெகாவாட் திறன் கொண்ட பிரமாண்ட அணையை கட்டி வருகிறது. இது இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியாக மாறும் யார்லுங் சாங்போ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது.

China dam india

அணை கட்டுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், அந்த அணையை எங்கு கட்டுகிறது சீனா? என்பதில்தான் பிரச்சனை. நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய அபாயகரமான மண்டலம் பகுதியில்தான் அணையை சீனா கட்டுகிறது. எப்போது வேண்டுமானாலும் அணை உடைந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே இதை 'டைம் பாம்' என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நிலநடுக்கம் ஏற்பட்டால் அணை உடைந்து, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்கள் கற்பனை செய்ய முடியாத பேரழிவை சந்திக்கும்.

இமயமலையின் சுற்றுச்சூழல் சமநிலையை இது சீர்குலைக்கும். ஆற்றின் போக்கை சீனா கட்டுப்படுத்துவது இந்தியாவின் நீர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். இந்த அணை உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டமாக இருக்கும். இது சீனாவின் புகழ்பெற்ற திரீ கோர்ஜஸ் அணையை விட 3 மடங்கு அதிக மின்சாரத்தை தயாரிக்கும் திறன் கொண்டது. இந்த அணையை சீனா 2033க்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.

நீர் எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை நேபாள வெள்ளம் தெளிவாக நமக்கு காட்டியிருக்கிறது. இதையெல்லாம் பார்த்தும் கூட.. சீனா தனது அணை கட்டும் திட்டத்திலிருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. இமயமலை பகுதயில் சீனாவின் கட்டுமானங்கள் நிச்சயம் இது போன்ற பேரழிவை ஏற்படுத்தும். இந்தியாவின் எல்லைக்கு அருகில் கட்டப்படும் இந்த அணை.. எதிர்காலத்தில் பெரிய சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறும்

நேபாள வெள்ளம்

இமயமலை பகுதியில் அதிக அளவு பனி பாறைகள் இருக்கும். இந்த பாறைகள், உருகி ஏரிகளாக மாறும். சாதாரண சமதள பரப்பில் உள்ள ஏரிகளின் கரைகள் வலுவானவை. ஆனால், இதுபோன்று மலை பகுதிகளில் உள்ள ஏரிகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றின் கரைகள் பலவீனமானவை. எப்போது வேண்டுமானாலும் உடையலாம். இப்படி இருக்கையில்தான்.. திடீரென பனி கட்டி ஒன்று உடைந்து விழுந்து, எரியின் கரைகளை உடைத்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம் மக்கள் குடியிருப்புகளை காலி செய்திருக்கிறது.

வெள்ளம் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 600ஐ நெருங்கி வருகிறது. 700க்கும் அதிகமானோர் காணவில்லை. காணமல் போனவர்களின் பட்டியலில் இந்தியர்களும், தமிழர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+