சீனா அதிபர் ஜின்பிங் அக்.11,12-ல் இந்தியா வருகை- வெளியுறவுத் துறை அமைச்சகம்
Recommended Video
டெல்லி: சீனா அதிபர் ஸி ஜின்பிங்கை அக்டோபர் 11,12 ஆகிய நாட்களில் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான 2-வது சந்திப்பு அக்டோபர் 11 முதல் 12-ந் தேதி வரை நடைபெறும்.

இச்சந்திப்பின் போது பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர். இச்சந்திப்பு மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது எந்த வித ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு அக்டோபர் 13-ல் ஜின்பிங் நேபாளத்துக்கு அரசு முறை பயணமாக செல்கிறார்.
வரவேற்க தயாராகும் மாமல்லபுரம்
இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்காக கடற்கரை நகரமான மாமல்லபுரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. மாமல்லபுரத்தில் புராதான சிற்பங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சாலையோரக் கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அந்த இடங்களில் புதியதாக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் தலைவர்களின் சந்திப்பு நாட்களில் மாமல்லபுரம் வருவதை தவிர்க்க வேண்டும் என தங்கும் விடுதி உரிமையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் இருதலைவர்களையும் வரவேற்க மாமல்லபுரம் ஆவலுடன் களைகட்டி வருகிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications