ஓயாத சீனா- இலங்கை கூட்டு சதி! கூடங்குளம், கல்பாக்கத்தை குறிவைக்கும் ராடார்கள்-பகீர் தகவல்
டெல்லி: இலங்கை- சீனா இணைந்து தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணு மின்நிலையங்களை குறிவைக்கும் வகையில் ராடார்களை நிறுவ உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் காலூன்றிக் கொண்டே இருக்கிறது சீனா. இந்தியாவும் பல்வேறு வகைகளில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க முயற்சித்து வருகிறது. இந்தியாவின் எதிர்ப்பை மீறி தென்னிலங்கையில் அம்பந்தோட்டா துறைமுகத்தை சீனா தன் வசமாக்கிக் கொண்டது.

இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து கடனுதவி வழங்குகிறது. ஆனால் சீனாவோ குறுகிய கால கடன்கள் அடிப்படையில் இலங்கைக்கு பெரும் பணம் வழங்க்கிறது. இதற்கு ஈடாக சீனாவின் நிலப்பகுதிகளை கையகப்படுத்துகிறது.
தென்னிலங்கையை தொடர்ந்து தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இந்தியாவோ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இப்போது இலங்கையின் தென்கோடி முனையான Dondra Bay பகுதியில் இலங்கையும் சீனாவும் பயங்கர நாசகார சதித் திட்டத்தில் இறங்கி உள்ளன. Dondra Bay ப்குதியில் அதிநவீன ரேடார்களை சீனா அமைக்க உள்ளது. இலங்கையின் திருகோணமலை எப்படி தெற்காசிய பிராந்தியத்தில் அதி முக்கியமானதோ அதைப் போல Dondra Bay இப்போது முக்கியமான நிலையாக உருவெடுக்க வைக்கிறது சீனா.
Dondra Bay பகுதியில் அதிநவீன ராடார்களை சீனா இங்கே நிறுவ உள்ளது. சீனாவின் இந்த ராடார் சதித் திட்டம் மூலம் இந்திய பெருங்கடல், வங்க கடல் முழுமையும் எளிதாக கண்காணிக்கக் கூடிய வல்லமையை சீனா பெறுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங்களை மிக எளிதாக சீனாவால் கண்காணித்துவிட முடியும். அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இந்திய கடற்படையின் முழுமையான செயல்பாட்டை கண்காணிக்கவும் முடியும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications