டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2018ல் தீப்பிடித்த எம்ஐ -17 ஹெலிகாப்டர்.. உடைந்த குப்பைகளை தூக்கிச் சென்ற சினூக் ஹெலிகாப்டர்

Google Oneindia Tamil News

டெல்லி: 2018 ல் விபத்துக்குள்ளான இந்திய விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகாப்டரின் குப்பைகளை கேதார்நாத் ஆலயத்தில் இருந்து எடுத்துக்கொண்டு சினூக் ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

சினூக் ஹெலிகாப்டர், இந்திய விமானப் படை பல்வேறு ராணுவச் சரக்குகளை மிகவும் உயரமான இடங்களுக்கு சுமந்து செல்ல உதவி வருகிறது. இது, பீரங்கி துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்றவற்றை மட்டும் சுமந்து செல்ல பயன்படாது. மாறாக, இந்த ஹெலிகாப்டர் தொலைதூரப் பகுதிகளில் பேரழிவை எதிர்கொள்பவர்களைக் காப்பாற்ற உதவும், இந்த ஹெலிகாப்டர்கள் அதிக கனரக ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு அருகிலுள்ள ஹெலிபேடில் தரையிறங்கும் போது இரும்புக் கட்டியுடன் மோதியதில் இந்திய விமானப்படையின் எம்ஐ -17 ஹெலிகாப்டர் தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில், விமானிக்கு லேசான காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் ஹெலிகாப்டர் சேதமடைந்தது. இந்நிலையில் அந்த ஹெலிகாப்டரின் குப்பைகளை இன்று சினூக் ஹெலிகாப்டர் எடுத்து சென்றது.

Chinook helicopter on Saturday took off the debris of Indian Air Forces MI-17 helicopter

எம்ஐ -19 ஹெலிகாப்டரின் குப்பைகள் அருகிலுள்ள விமான தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. குப்பைகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகள் கடந்த 15 நாட்களாக நடந்து வருகின்றன. விமானப்படை அதிகாரிகள் கேதார்நாத் சென்று சேதமடைந்த ஹெலிகாப்டரை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

English summary
A Chinook helicopter on Saturday took off the debris of Indian Air Force's MI-17 helicopter that caught fire following a collision with an iron girder while landing at the helipad near Kedarnath temple in 2018.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X