NSE சித்ரா ராமகிருஷ்ணனின் கூட்டாளி ஆனந்த் சுப்பிரமணியன்தான் மர்ம தமிழ் சாமியாரா? சிபிஐ சந்தேகம்
டெல்லி: நாட்டையே அதிரவைத்த தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் குறிப்பிடும் மர்ம சாமியார் அவரது கூட்டாளியான ஆனந்த் சுப்பிரமணியன்தானா? என சிபிஐ அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பொருளாதார மையங்களில் ஒன்று தேசிய பங்கு சந்தை. இதன் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகித்த சித்ரா, அனைத்து நிர்வாக விவகாரங்களும் சாமியார் ஒருவரது மெயிலுக்கு அனுப்பி இருக்கிறார்.

அந்தரங்க விவகாரங்கள்
அத்துடன் சாமியாருடன் மிக நெருக்கமாகவும் இருப்பதாக அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் இ மெயில் தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமுடியை சீர் செய்வது, செசல்ஸ் நாட்டுக்கு சுற்றுலா செல்வது, செசல்ஸ் கடற்கரையில் குளியல் போடுவது உள்ளிட்ட விவகாரங்களும் அந்த இ மெயிலில் கொட்டி கிடக்கின்றன.

சித்ராவின் ரிப்பீட்டு
இந்த நிலையில் சித்ராவை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தமக்கு அந்த சாமியார் யார் என்று அடையாளம் தெரியாது; அவரே தமது வழிகாட்டி; அவர் இமயமலை யோகி என்றெல்லாம் புரூடா விட்டிருக்கிறார். ஆனாலும் சிபிஐ அதிகாரிகள் இதனை நம்ப தயாரில்லை. சித்ராவோ இதே பல்லவியைத்தான் பாடி வருகிறார் என்கின்றன சிபிஐ வட்டாரங்கள்.

ஆனந்த் சுப்பிரமணியன் மீது சந்தேகம்
இதனிடையே சித்ராவால் தேசிய பங்கு சந்தைக்குள் மிக அதிகமான ஊதியத்துக்கு அழைத்துவரப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியன் மீதும் சிபிஐ அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ஆனந்த் சுப்பிரமணியன்தான் அந்த மர்ம சாமியாராக இருக்கலாம் என்பதும் சிபிஐ சந்தேகம். சாமியார் பெயரில் சித்ராவும் ஆனந்த் சுப்பிரமணியனும் மெகா சீரியலை நடத்தி வருகிறார்களா? எனவும் குழம்பி போயுள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.

சித்ராவின் கூட்டாளி
ஆனால் சித்ரா, சாமியாருக்கு அனுப்பிய சில மெயில்களை ஆனந்த் சுப்பிரமணியன் காபி செய்து வைத்திருக்கிறார். அவர் ஏன் இந்த இ மெயில்களை காபி செய்து வைத்தார்? என்கிற கேள்விக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. சித்ரா ராமகிருஷ்ணன் வாயை திறந்து உண்மையை சொல்ல மறுத்தும் வருகிறார். சித்ராவும் ஆனந்த் சுப்பிரமணியனும் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்டு இன்னும் எத்தனை மோசடிகளை அரங்கேற்றி இருக்கின்றனரோ? எனவும் விசாரிக்கப்படுகிறதாம். அனேகமாக இந்த மர்ம முடிச்சை விரைவில் சிபிஐ அதிகாரிகள் அவிழ்த்து நாட்டை அதிர வைப்பார்கள் என்கின்றன டெல்லி வட்டாரங்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications