கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ!

நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை பெண் ஒருவர் துணிந்து எதிர்க்கும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. வைரல் வீடியோ!

    டெல்லி: நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரை பெண் ஒருவர் துணிந்து எதிர்க்கும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது. இந்த மாணவ போராட்டத்திற்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இந்த வீடியோ மாறியுள்ளது.

    குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடந்த போராட்டம் பல்வேறு இடங்களில் கலவரமாக மாறி உள்ளது. இதற்கு எதிராக டெல்லியில் இன்று போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர்.

    மாணவர்கள் கைது

    மாணவர்கள் கைது

    இந்த போராட்டத்தில் நேற்று 100க்கும் அதிகமான ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை கல்லூரிக்குள் இருக்கும் விடுதிக்குள் புகுந்து போலீசார் கடுமையாக தாக்கினார்கள். மொத்தமாக தாக்கிவிட்டு அதன்பின் குண்டு கட்டாக அவர்களை தூக்கி சென்றார்கள்.

    மாணவிகள் மாஸ்

    நேற்று போலீசார் மாணவர்களை இப்படி அத்துமீறி தாக்கிய போது, அங்கு சில மாணவிகள் போலீசாரை எதிர்த்து கேள்வி எழுப்பினார்கள். வகுப்பின் சக மாணவர்களை லத்தியால் தாக்குதவதை மாணவிகள் தைரியமாக தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பெண் மாணவிகளும் மோசமாக தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

    சண்டை

    சண்டை

    நேற்று இந்த பெண் மாணவி தன்னுடைய நண்பனை காப்பதற்காக போலீசிடம் சண்டை போட்டு அவர்களிடம் அடி வாங்கினார். ஆனாலும் கூட கலங்காமல் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தினார். இதனால் போலீசார் அந்த பெண்ணில் காலில் தாக்கினார்கள். அதோடு இப்படி எல்லாம் அடிக்க கூடாது.. அவ்வளவுதான், என்று போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

    பெண் போலீசார்

    இந்த பெண் போலீசாரை நோக்கி விரல்களை உயர்த்தும் வீடியோ இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது. இந்த பெண்ணுக்கு நிறைய வீரம் இருக்கிறது. இந்த மொத்த போராட்டத்திற்கும் அவர் அடையாளமாக மாறி இருக்கிறார் என்று மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+