அல்லா ரக்கா ரகுமான்.. ஏ.ஆர் ரகுமான் திடீரென்று போட்ட ஒரு டிவிட்.. இணையம் முழுக்க செம வைரல்!
2 ஆஸ்கார் வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய முழு பெயரை வெளியிட்டு செய்திருக்கும் டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
டெல்லி: 2 ஆஸ்கார் வென்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய முழு பெயரை வெளியிட்டு செய்திருக்கும் டிவிட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி, அசாம், மும்பை என்று பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.
நாடு முழுக்க இப்படி போராட்டம் நடந்து வரும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் தான் பிரிட்டன் செல்லும் விமான டிக்கெட் புகைப்படத்தை டிவிட் செய்துள்ளார். அதில் அவரின் முழு பெயர் இடம்பெற்றுள்ளது. அல்லா ரக்கா ரகுமான் என்று அவரின் பெயர் அதில் இடம்பிடித்துள்ளது.
— A.R.Rahman (@arrahman) December 15, 2019 |
பெயர்
முதல் முறையாக ஏ.ஆர் ரகுமான் இப்படி தன்னுடைய முழு பெயர் தெரியும் வகையில் டிவிட் செய்துள்ளார். சரியாக மதியம் வட இந்தியாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடக்கும் போது ஏ.ஆர் ரகுமான் இப்படி டிவிட் செய்து இருந்தார். ஏ.ஆர்என்பதன் விளக்கம் அல்லா ரக்கா என்று இன்றுதான் பலருக்கும் தெரிய வந்துள்ளது.
|
என்ன பதில்
இதனால் அவர் தன்னுடைய முழு பெயரின் அடையாளத்தை வேண்டும் என்று வெளியே கூறி அதன் மூலம் மறைமுகமாக போராடுகிறார் என்று கூறுகிறார்கள். மாணவர்கள் போராட்டத்திற்கு மறைமுகமாக ஆதரவு தருகிறார் என்று பலர் டிவிட் செய்து வருகிறார்கள். ஏ.ஆர் ரகுமான் டிவிட்டிற்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் பதில் அளித்து வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம்
ஏற்கனவே ஏ.ஆர் ரகுமான் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது , தமிழா, தமிழா நாளை நம் நாடே பாடலை டிவிட்டரில் வெளியிட்டு ஆதரவு மறைமுகமாக தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போதும் அதற்கு ஆதரவாக டிவிட் செய்து வைரலானார்.

அடையாள அரசியல்
இந்த நிலையில் இந்த முறையும் அவர் தனது பெயரை வெளிப்படுத்தி பேசி உள்ளார். ஆனால் நேரடியாக எதிர்க்க விருப்பம் இல்லாமல் மறைமுகமாக டிவிட் செய்து இருக்கிறார் என்று கூறுகிறார்கள். இவரின் டிவிட்டை பலரும் ஷேர் செய்து வருகிறார்கள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications