டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு.. பொய்யான செய்திகள் வலம் வருவதாக நீதிமன்றம் வருத்தம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது.

Google Oneindia Tamil News

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை விசாரிக்கும் நீதிபதி போட்பேவை நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் ஆகியோர் சந்தித்தாக தகவல் வெளியானது. இந்த தகவலை தற்போது உச்ச நீதிமன்றம் பொய் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் பாலியல் ஒருவர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் அளித்த பெண், ஜூனியர் பணியாளாக உச்சநீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் போட்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இதை விசாரிக்கிறது.

ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்!ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்!

மாட்டேன்

மாட்டேன்

ஆனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் வரை இந்த விசாரணை நடக்க உள்ளது.

என்ன கடிதம்

என்ன கடிதம்

இந்த நிலையில் இந்த வழக்கில் அந்த புகார் அளித்த பெண் ஆஜராகாதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேக்கு கடிதம் எழுதியதாக தகவல் வந்தது. அதாவது புகார் அளித்த பெண் ஆஜராகாமல் இந்த வழக்கில் விசாரணை நடத்துவது தவறு, அது நீதிமன்ற மான்பை கெடுக்கும் என்று சந்திரசூட் குறிப்பிட்டதாக செய்திகள் வந்தது.

என்ன சந்திப்பு

என்ன சந்திப்பு

மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட் மற்றும் ஆர்எஸ் நாரிமன் இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்ததாகவும் கூறப்பட்டது. கடிதத்தில் இருந்த புகாரை அவர்கள் நேரடியாக, உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை சந்தித்து அளித்தனர் என்று ஆங்கில ஊடகங்களில் செய்தி வந்தது.

என்ன மறுப்பு

என்ன மறுப்பு

ஆனால் இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி போட்பேவை யாரும் வந்து சந்திக்கவில்லை என்று நீதிமன்றம் கூறி உள்ளது. இந்த பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திரசூட், போட்போவிற்கு கடிதம் எழுதினாரா என்பது குறித்து எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படவில்லை.

English summary
CJI Case: SC Denies Justice Bobde meeting with Justices Chandrachud, Nariman. SC says it is false news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X