இது என்ன காபி கடையா.. இந்த வார்த்தை எல்லாம் எனக்கு பிடிக்காது.. வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது 'யா யா' என்று கூறிய வழக்கறிஞரை கண்டித்த தலைமை நீதிபதி, இது காஃபி ஷாப்பா என்று கேட்டதோடு, இத்தகைய வார்த்தைகளை நீதிமன்றத்தில் பயன்படுத்துவது தனக்கு பிடிக்காது என கடிந்து கொண்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட், இன்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவரை கடிந்து கொண்டார். நண்பர்களிடம் பேசுவது போல யா 'yeah' என்ற வார்த்தையை வழக்கறிஞர் ஒருவர் பயன்படுத்தியதால் கோபம் அடைந்த சந்திரசூட், இந்த யா என்ற வார்த்தைதான் எனக்கு அலர்ஜியான (பிடிக்காத) வார்த்தை... இது என்ன காஃபி ஷாப்பா? என கடிந்து கொண்டார். இது குறித்த விவரம் வருமாறு:-

உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, வழக்கறிஞர் ஒருவர் 2018 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை குறிப்பிட்டார். அந்த மனுவில், முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை பதில் மனு தாரராகவும் அவர் சேர்த்து இருந்தார். இதைப் பார்த்த தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், "இது சட்டப்பிரிவு 32 தொடர்பான வழக்கு அல்லவா? இதை எப்படி நீதிபதியை பதில் மனுதாரராக சேர்த்து பொது நல மனுவாக தாக்கல் செய்ய முடியும்? என்று கேட்டார்.
அரசியலமைப்பின் 32 வது பிரிவு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது அரசியலமைப்பு தீர்வுகளைப் பெறுவதற்கான உரிமையை உறுதி செய்கிறது. தலைமை நீதிபதி கேள்விக்கு பதிலளித்த வழக்கறிஞர்.. யா யா.. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் இதைத்தான் கூறினார். மறு சீரய்வு மனுவை தாக்கல் செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.. குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இது ஒன்றும் காஃபி ஷாப் இல்லை..
இது என்ன யா யா.. இந்தவார்த்தையே எனக்கு பிடிக்காதது. இங்கே இதை அனுமதிக்க முடியாது. நீதிபதி கோகாய் இந்த நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. இது போன்ற மனுவை நீதிபதிக்கு எதிராக நீங்கள் தாக்கல் செய்து உள் விசாரணையை கோர முடியாது. ஏனெனில் உங்கள் மனு முந்தைய அமர்வில் வெற்றி பெறவில்லை"என்று கூறினார். இதைத்தொடர்ந்து மனுவை பதிவாளர் பரீசிலிப்பார் எனவும் நீதிபதி கோகாய் பெயரை தனது மனுவில் இருந்து நீக்க வேண்டும் எனவும் மனுதாரரை அறிவுறுத்தினார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications